ETV Bharat / state

ஆண்டன் பாலசிங்கத்தைக் கொல்ல முயன்ற வழக்கு - தொழிலதிபர் வி.கே.டி.பாலன் மனு தள்ளுபடி!

balan
balan
author img

By

Published : Oct 23, 2020, 12:14 PM IST

Updated : Oct 23, 2020, 1:15 PM IST

12:09 October 23

சென்னை: விடுதலைப்புலிகள் அமைப்பின் அரசியல் ஆலோசகரான பாலசிங்கத்தை குண்டு வைத்து கொல்ல முயன்றதாக பிரபல தொழிலதிபர் வி.கே.டி.பாலன் மீதான வழக்கை ரத்து செய்ய சென்னை உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது.

விடுதலைப்புலிகள் அமைப்பின் அரசியல் ஆலோசகர் ஆண்டன் பாலசிங்கத்தை கொலை செய்யும் நோக்குடன், கடந்த 1985 ஆம் ஆண்டு சென்னை பெசன்ட் நகரில் உள்ள அவரது வீட்டில் வெடிகுண்டு வைக்கப்பட்டது. இந்த குண்டுவெடிப்பில் யாரும் காயமடையவில்லை. இந்நிகழ்வு தொடர்பாக கந்தசாமி, வி.கே.டி.பாலன், ரஞ்சன், மணவை தம்பி, பவானி, பிரேம்குமார், ராதாகிருஷ்ணன் ஆகியோருக்கு எதிராக சிபிசிஐடி வழக்குப்பதிவு செய்தது.

இவ்வழக்கில் கைது செய்யப்பட்ட கந்தசாமி மற்றும் பிரேம்குமார் ஆகியோர் தலைமறைவாகிவிட்டனர். ரஞ்சன், மணவை தம்பி ஆகியோர் இறந்து விட்டனர். ராதாகிருஷ்ணன் அப்ரூவராகிவிட்டார். வி.கே.டி.பாலன் மட்டும் வழக்கை எதிர் கொண்டுள்ளார். இந்நிலையில் 30 ஆண்டுகளாக இந்த வழக்கில் எந்த முன்னேற்றமும் இல்லாததாலும், வழக்கு தொடர்பான ஆவணங்கள் காணாமல் போய்விட்டதாலும், பாலசிங்கம் உள்ளிட்ட பல முக்கிய சாட்சிகள் இறந்து விட்டதாலும், தனக்கு எதிரான இவ்வழக்கை ரத்து செய்ய தொழிலதிபர் வி.கே.டி.பாலன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

இந்த மனு நீதிபதி பி.என்.பிரகாஷ் முன்பு விசாரணைக்கு வந்த போது, காவல்துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞர், அப்ரூவர் உள்ளிட்ட சில சாட்சிகள் உயிருடன் இருப்பதாகவும், குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் சிலர் இறந்ததற்காகவும், தலைமறைவாக உள்ளதற்காகவும் வழக்கை ரத்து செய்ய முடியாது என வாதிட்டார். 

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, பாலசிங்கம் இறந்து விட்டார் என்பதற்காக, வழக்கை ரத்து செய்ய முடியாது எனவும், உயிருடன் இருக்கும் பிற சாட்சிகள் மூலமாக வழக்கை நிரூபிக்க முடியும் எனவும் தெரிவித்தார். மேலும், நீண்ட காலதாமதம், ஆவணங்கள் காணாமல் போனது ஆகியவை வழக்கை ரத்து செய்வதற்கு நல்ல காரணம் அல்ல என தெரிவித்த நீதிபதி, வழக்கு தொடர்பான ஆவணங்களை அமர்வு நீதிமன்ற விசாரணைக்கு அனுப்பும் நடைமுறையை 3 மாதங்களுக்குள் முடிக்க வேண்டும் என மாஜிஸ்திரேட் நீதிமன்றத்திற்கு உத்தரவிட்டார்.

அமர்வு நீதிமன்றம் ஆவணங்களை பெற்று சட்டப்படி விசாரணை நடைமுறைகளை துவங்க உத்தரவிட்ட நீதிபதி, வி.கே.டி.பாலன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

இதையும் படிங்க: ஆளுநரின் கால அவகாச கோரிக்கையில் நியாயமில்லை- டிடிவி தினகரன்

Last Updated : Oct 23, 2020, 1:15 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.