ETV Bharat / state

கருணாநிதிக்கு சிலை வைப்பதை எதிர்த்த வழக்கு தள்ளுபடி - உயர் நீதிமன்றம்! - karunanithi statue

திருவண்ணாமலையில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதிக்கு சிலை வைக்கப்படுவதை எதிர்த்த வழக்கை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

உயர்நீதிமன்றம்
உயர்நீதிமன்றம்
author img

By

Published : Jun 14, 2022, 5:18 PM IST

Updated : Jun 14, 2022, 6:49 PM IST

சென்னை: திருவண்ணாமலை கிரிவலப்பாதையும், மாநில நெடுஞ்சாலையும் இணையும் வேங்கைக்கால் பகுதியில் ராஜேந்திரன் என்பவருக்குச் சொந்தமான 92.5 அடி நிலத்தை வாங்கியுள்ளதாகவும், ஜீவா கல்வி அறக்கட்டளை அருகில் உள்ள நிலத்தை ஆக்கிரமித்தும் மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதிக்கு சிலை அமைக்கப்பட உள்ளது.

இந்நிலையில் கிரிவலப்பாதையில் சிலை அமைப்பதால் லட்சக்கணக்கான பக்தர்கள் பாதிக்கப்படுவர் எனவும், அப்பகுதியில் கால்வாய் அமைந்துள்ளதால், அங்கு கட்டுமானம் மேற்கொண்டால் நீர் போக்குவரத்து பாதிக்கப்படும் என்றும் சென்னை வேளச்சேரியைச் சேர்ந்த ஜி. கார்த்திக் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம் ஆக்கிரமிப்பு குறித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்ய மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிட்டது. மேலும், குறிப்பிட்ட நிலத்தில் சிலை அமைக்க இடைக்கால தடை விதித்தும் உத்தரவிட்டது. இந்த தடையை நீக்க கோரி ஜீவா கல்வி அறக்கட்டளை மற்றும் திருவண்ணாமலை மாவட்ட திமுக சார்பில் புதிய மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இந்த மனு சென்னை உயர் நீதிமன்ற தலைமைநீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி, நீதிபதி என்.மாலா அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், நிலத்திற்கு ஏற்கெனவே பட்டா வழங்கப்பட்டுள்ளது, பட்டா வழங்கியதை எதிர்த்துதான் வழக்குத் தொடர்ந்திருக்க வேண்டும் என்று தெரிவித்து, வழக்கை தள்ளுபடி செய்யப்போவதாக தெரிவித்தனர். இதையடுத்து மனுதாரர் வழக்கை திரும்பப்பெற்றதால் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது.

இதையும் படிங்க: நேஷனல் ஹெரால்டு வழக்கின் வரலாறும்... முழுப் பின்னணியும்...

Last Updated : Jun 14, 2022, 6:49 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.