ETV Bharat / state

அனுமதியில்லா கட்டடங்கள்: மாநகராட்சி செயற்பொறியாளர் விரிவான விளக்கத்தை தாக்கல் செய்ய உத்தரவு

சென்னை: அனுமதியில்லா கட்டடங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்காமல் மாநகராட்சி அலுவலர்கள் மெத்தனப்போக்குடன் செயல்படுவதாக சென்னை உயர் நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.

MHC
சென்னை உயர் நீதிமன்றம்
author img

By

Published : May 11, 2021, 2:54 PM IST

சென்னை நெற்குன்றத்தில் சி.எம்.டி.ஏ. விதிகளை மீறி கட்டடம் கட்ட தடை விதித்து 2016ஆம் ஆண்டில் பிறப்பித்த உத்தரவை அமல்படுத்த வளசரவாக்கம் மண்டல செயற்பொறியாளருக்கு உத்தரவிடக் கோரி, ஸ்டீபன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் சுரேஷ்குமார் மற்றும் ஆதிகேசவலு அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, கடந்த 2016ஆம் ஆண்டு நவம்பர் மாதம் கட்டுமான பணியை தொடர தடை விதித்து பிறப்பிக்கப்பட்ட நோட்டீஸ் மீது ஏதும் நடவடிக்கை எடுக்கப்பட்டதா? அனுமதியின்றி கட்டப்பட்ட கட்டடம் இடிக்கப்பட்டதா? என மாநகராட்சி தரப்பு வழக்கறிஞரிடம் கேள்வி எழுப்பினர்.

அதற்கு, சம்பந்தப்பட்ட அலுவலர் பணிமாற்றம் செய்யப்பட்டதாலும், பொறியாளர் மரணமடைந்துவிட்டதாலும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என மாநகராட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டது. பணிமாற்றம் செய்யப்பட்ட அலுவலர் குறித்தும், இறந்த பொறியாளர் குறித்தும் அறிக்கையில் குறிப்பிடாததை சுட்டிக்காட்டிய நீதிபதிகள், 2016ஆம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட நோட்டீஸின் அடிப்படையில் ஐந்து ஆண்டுகளாகியும் எந்த நடவடிக்கையும் எடுக்காததற்கான காரணத்தையும் தெரிவிக்கவில்லை என அதிருப்தி தெரிவித்தனர்.

கட்டுமானம் மேற்கொள்ள தடை விதித்து நோட்டீஸ் அனுப்பியதுடன், தங்கள் பணி முடிந்துவிட்டதாக கருதி எந்த மேல் நடவடிக்கையும் எடுக்காமல் மாநகராட்சி அலுவலர்கள் மெத்தனப் போக்குடன் செயல்படுவதால் நகரமைப்பில் பல பிரச்னைகள் உருவாவதாக நீதிபதிகள் கண்டனம் தெரிவித்தனர்.

நகர்மயமாதல் காரணமாக நகரங்கள் விரிவடைந்துவரும் நிலையில், அனுமதியில்லா கட்டுமானங்களை ஆரம்ப நிலையிலேயே அலுவலர்கள் தடுக்க வேண்டும் என அறிவுறுத்திய நீதிபதிகள், அவ்வாறு நடவடிக்கைகள் எடுக்காததால் இந்த வகை கட்டடங்களை அகற்ற கோரி ஏராளமான வழக்குகள் குவிந்து நீதிமன்றத்துக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்துகிறது எனக் கூறியுள்ளனர்.

நீதிமன்றம் பல உத்தரவுகளை பிறப்பித்தும் அலுவலர்களின் செயல்பாடுகளில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை எனக் கூறிய நீதிபதிகள், இந்த வழக்கில் 2016ஆம் ஆண்டே கட்டுமான பணிகளுக்கு தடை விதித்து பிறப்பித்த நோட்டீஸின் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது? இத்தனை ஆண்டுகளாக எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் இருந்த சம்பந்தப்பட்ட அலுவலர்கள் மீது எடுத்த நடவடிக்கைகள் குறித்தும், சென்னை மாநகராட்சி செயற்பொறியாளர் விரிவான விளக்கத்தை தாக்கல் செய்ய உத்தரவிட்டனர். மேலும், வழக்கு விசாரணையை ஜூன் 7ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.