ETV Bharat / state

3வது குழந்தைப்பேறுக்காக விடுப்பு கேட்டு அரசுப்பள்ளி ஆசிரியர் வழக்கு - அரசு பதிலளிக்க உத்தரவு!

மூன்றாவது குழந்தை பேறுக்காக, அரசுப்பள்ளி ஆசிரியருக்கு ஓராண்டு மகப்பேறு விடுப்பு வழங்குவது குறித்து 12 வாரங்களில் முடிவெடுக்க தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

MHC
MHC
author img

By

Published : Dec 9, 2022, 6:34 PM IST

சென்னை: ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த அரசு பள்ளி ஆசிரியரான கதீஜா உமாமா தனது மூன்றாவது பிரசவத்திற்கு ஓராண்டு காலத்திற்கு விடுப்பு கோரி மாவட்ட கல்வி அதிகாரிக்கு விண்ணப்பித்தார். விண்ணப்பத்தின் மீது எந்த முடிவும் எடுக்கப்படாததால் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு நீதிபதி அப்துல் குத்தூஸ் முன் விசாரணைக்கு வந்தபோது, அரசுப் பணியில் உள்ளவர்களுக்கு முதல் இரண்டு குழந்தைகளுக்கு மட்டுமே சம்பளத்துடன் கூடிய விடுப்பு வழங்கப்படும் என அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக அரசுத்தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

ஆனால், பணியில் சேர்வதற்கு முன்பாகவே இரண்டு குழந்தைகள் பிறந்து விட்டதாகவும், பணியில் சேர்ந்த பின்னரே மூன்றாவது குழந்தைக்கு கருவுற்றதால் விடுப்பு பெற தனக்கு உரிமை உள்ளதாகவும் மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

மனுதாரர் தரப்பு வாதத்தை ஏற்றுக் கொண்ட நீதிபதி, கதீஜாவின் விண்ணப்பத்தை பரிசீலித்து ஜூலை 7ஆம் தேதி முதல் ஓராண்டு மகப்பேறு விடுப்பு வழங்குவது குறித்து 12 வாரங்களில் முடிவெடுக்க வேண்டும் என உத்தரவிட்டு, வழக்கை முடித்து வைத்தார்.

இதையும் படிங்க: மாண்டஸ் புயல் கரையைக் கடக்கும் நேரம்: எந்தெந்த பகுதிகளில் பஸ் இயங்காது தெரியுமா?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.