ETV Bharat / state

கோடநாடு கொலையை விசாரிக்க தடைகோரிய வழக்கில் தீர்ப்பு ஒத்திவைப்பு! - கேடாநாடு எஸ்டேட்

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் மேற்கொண்டு காவல் துறை விசாரணை நடத்த தடைவிதிக்கக் கோரிய வழக்கின் தீர்ப்பை வரும் வெள்ளிக் கிழமைக்கு சென்னை உயர் நீதிமன்றம் ஒத்தி வைத்துள்ளது.

சென்னை உயர் நீதிமன்றம்
சென்னை உயர் நீதிமன்றம்
author img

By

Published : Aug 24, 2021, 6:30 PM IST

Updated : Aug 24, 2021, 7:49 PM IST

சென்னை: கோடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கில் காவல் துறை சாட்சியாக சேர்க்கப்பட்டுள்ள கோயம்புத்தூரைச் சேர்ந்த ரவி என்ற அனுபவ் ரவி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார்.

அதில், ”கோடநாடு கொலை வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள கனகராஜ் என்பவரைத் தனக்கு தெரியும். இந்த வழக்கில் மேல் விசாரணை நடைபெற இருப்பதால், தங்களின் விருப்பபப்டி வாக்குமூலம் அளிக்க வேண்டும் என பலதரப்பில் இருந்தும் எனக்கு மிரட்டல் வருகிறது.

அரசு தரப்பில், 41 சாட்சிகளிடம் விசாரணை முடிக்கப்பட்டுள்ள நிலையில், குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் தரப்பு சாட்சிகள் விசாரணை இன்னும் தொடங்கப்படவில்லை. நீதிமன்றம் அனுமதி இன்றி மேல் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

உயர் நீதிமன்ற உத்தரவின்படி. இந்த வழக்கை விரைந்து முடிக்கும்படி விசாரணை நீதிமன்றத்திற்கு உத்தரவிடுவதுடன்,மேல் விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும்” எனக் கோரியிருந்தார்.

மனுதாரர் தரப்பு வாதம்

இந்த வழக்கு நீதிபதி எம். நிர்மல்குமார் முன்பு விசாரணைக்கு வந்தது. அனுபவ் ரவி தரப்பில் மூத்த வழக்கறிஞர் ஐ.சுப்பிரமணியம் ஆஜரானார். அப்போது சாட்சிகள் யாரிடமும் தெரிவிக்காமல் குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் சிலரிடம் மட்டும் தெரிவித்துவிட்டு, வழக்கை மேற்கொண்டு விசாரிப்பதாக நீலகிரி மாவட்ட நீதிமன்றத்தில் காவல் துறை மனு தாக்கல் செய்ததாக தெரிவித்தார். மனுதாக்கல் செய்த மறுநாளே விசாரணைக்கு அழைத்ததையும் சுட்டிக்காட்டினார்.

மற்றொரு மூத்த வழக்கறிஞர் ஏ.எல். சோமையாஜி ஆஜராகி, குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து, குற்ற வழக்கின் விசாரணை தொடங்கிய பின்பு குற்றவாளியிடம் மறுவிசாரணை நடத்த முடியாது. நீதிமன்றத்தின் அனுமதியின்றி சயானிடம் காவல் துறை மறு விசாரணை மேற்கொண்டுள்ளது. அனுமதி பெற்றே மறுவிசாரணை நடைபெறுவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் தவறான தகவலை அளித்துள்ளார் எனக் குற்றஞ்சாட்டினார்.

அரசு தரப்பு வாதம்

தமிழ்நாடு அரசு தரப்பில், தலைமை வழக்கறிஞர் சண்முகசுந்தரம் ஆஜராகி, ஒரு குற்ற வழக்கில் தொடர்புடையவர்களை முழுமையாக கண்டறிந்து சட்டத்தின் முன் நிறுத்தவேண்டும் என்ற நோக்கில், விசாரணையை விரிவுபடுத்துவதற்காக நீலகிரி நீதிமன்றத்தில் காவல் துறையால் மெமோ தாக்கல் செய்யப்பட்டதாகவும், அது நிராகரிக்கப்படவில்லை என்றும் தெரிவித்தார். வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட சிலர் விசாரணையை விரிவுப்படுத்த வேண்டுமென நீதிபதியிடம் கடிதம் கொடுத்துள்ளதாகவும் தெரிவித்தார்.

காவல் துறை தரப்பு வாதம்

காவல் துறை தரப்பில் அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் முகமது ஜின்னா ஆஜரானார். அவர், மனுதாரர் கூறும் குற்றச்சாட்டுகள் அனைத்துமே அனுமானத்தின் அடிப்படையில் கூறப்படுபவை. மனுதாரர் அனுபவ் ரவி காவல் துறை சாட்சியம் மட்டுமல்ல என்றும், வழக்கில் குற்றஞ்சாட்டபட்டவர்களுடன் நெருக்கமானவர் எனவும் சுட்டிக்காட்டினார். காவல்துறை விரிவுபடுத்தப்பட்ட விசாரணையை நடத்தி நீதிமன்றத்தில்தான் அறிக்கை தாக்கல் செய்ய இருக்கிறது எனவும் கூறினார்.

வழக்கில் தொடர்புடையவர்கள் சிலரின் மரணம், சிலர் விபத்துக்குள்ளானது போன்ற விஷயங்கள் முன்பு முறையாக விசாரிக்கப்படவில்லை. தற்போது முழுமையாக விசாரிக்கப்படுகிறது. விசாரணைக்கு அழைத்தும் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்காமல், நீதிமன்றத்தை நாடியுள்ளார். வேண்டுமானால் மனுதாரர், அவரது வழக்கறிஞரின் துணையுடன் காவல் நிலையத்தில் ஆஜராகலாம். கோடநாடு எஸ்டேட்டின் உரிமையாளரான நிறுவனத்தின் இயக்குனரையும் இதுவரை விசாரிக்கவில்லை என குறிப்பிட்டார்.

தீர்ப்பு ஒத்தி வைப்பு

அப்போது குறுக்கிட்ட நீதிபதி, விசாரணையை இப்படி விரிவுப்படுத்திக் கொண்டே போனால் எப்போதுதான் நீலகிரி நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்யப்படும் என கேள்வி எழுப்பினார்

அதற்கு அரசு தலைமை வழக்கறிஞர், யாரையும் தேவையில்லாமல் துன்புறுத்தும் நோக்கம் இல்லை என தெரிவித்ததுடன், விரிவுபடுத்தப்பட்ட விசாரணையை முடிக்க 8 வார கால அவகாசம் தேவைப்படும் என தெரிவித்தார். அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி வழக்கின் தீர்ப்பை வரும் வெள்ளிக்கிழமைக்கு (ஆக.27) ஒத்திவைத்தார்.

இதையும் படிங்க: 'எம்.பி. சீட்டை குறைச்சீங்களே... ஏன் இழப்பீடா தமிழ்நாட்டுக்கு ரூ.5,600 கோடி தரல'- நீதிபதிகள் கேள்வி

Last Updated : Aug 24, 2021, 7:49 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.