ETV Bharat / state

பாதுகாப்பு படைகளில் பெண் ஊழியர்களுக்கு பாதுகாப்பு! - அதிரடி உத்தரவு போட்ட உயர்நீதிமன்றம் - பாலியல் தொல்லை

ராணுவம் உள்ளிட்ட பாதுகாப்பு படைப் பிரிவுகளிலும் பெண் ஊழியர்கள் மீதான பாலியல் தொல்லைகள் தடைச் சட்டத்தின் கீழ் உள்புகார் குழுக்கள் செயல்படுவதை உறுதி செய்ய வேண்டும் என மத்திய அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பாதுகாப்பை உறுதி செய்ய மத்திய அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
பணியிடங்களில் பெண்களுக்கு பாலியல் தொல்லை!
author img

By

Published : Jul 22, 2023, 4:33 PM IST

சென்னை: கோவையைச் சேர்ந்த விமானப்படை அதிகாரி சக அதிகாரி ஒருவரால் பாலியல் தொல்லைக்கு ஆளானதாக தொடர்ந்த வழக்கில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கோவையில் உள்ள விமானப்படை கல்லூரியில் கடந்த 2021ம் ஆண்டு நடந்த பயிற்சி வகுப்புக்கு வந்த விமானப் படை பெண் அதிகாரியை சக அதிகாரி ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்ததாக உயர் அதிகாரிகளுக்கு புகார் தெரிவிக்கப்பட்டது. இந்த புகாரின் அடிப்படையில் விமானப் படையின் ராணுவ நீதிமன்றம், விசாரணையை துவங்கியது.

இந்த விசாரணை அப்பெண்ணிற்கு திருப்தி அளிக்காததால் பாதிக்கப்பட்ட பெண் அதிகாரி கோவை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். இந்த புகாரின் அடிப்படையில் பதிவு செய்யப்பட்ட வழக்கில் சம்பந்தப்பட்ட விமானப்படை அதிகாரி கைது செய்யப்பட்டார்.

இந்நிலையில், விமானப் படைச் சட்டப்படி குற்றம் சாட்டப்பட்டவரை தங்கள் வசம் ஒப்படைக்க கோரி, விமானப் படை கல்லூரி கமாண்டண்ட் தாக்கல் செய்த மனுவை ஏற்றது கோவை மகளிர் சிறப்பு நீதிமன்றம். குற்றம் சாட்டப்பட்டவரை ஒப்படைத்து உத்தரவிட்டது. இந்த உத்தரவை அமர்வு நீதிமன்றமும் உறுதி செய்தது.

இதை எதிர்த்து கோவை அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் தாக்கல் செய்த மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி மஞ்சுளா, விமான படைச் சட்டம் குற்ற விசாரணை முறைச் சட்டப் பிரிவுகளையும், உச்ச நீதிமன்ற தீர்ப்புகளையும் சுட்டிக்காட்டி, ராணுவ நீதிமன்றம் விசாரணை நடத்தி வரும் நிலையில் போலீசார் விசாரணையை தொடர அவசியம் இல்லை எனவும், குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய தேவையில்லை எனவும் உத்தரவிட்டுள்ளார்.

பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்க சட்டங்கள் கொண்டு வரப்பட்டு விழிப்புணர்வு ஏற்பட்டுள்ள நிலையில், விமானப் படை பெண் அதிகாரி ஒருவருக்கே தன் மீதான வன்முறைக்கு எதிராக போராட தைரியம் இல்லாவிட்டால் வேறு யாருக்கு இருக்கும் என கேள்வி எழுப்பினார் நீதிபதி.

மேலும், ராணுவம், கடற்படை, விமானப் படைகளிலும் உள்ளிட்ட பாதுகாப்பு படைகளிலும், பணியிடங்களில் பெண்களுக்கு எதிரான பாலியல் தொல்லைகள் தடைச் சட்டத்தின் கீழ் உள் புகார் குழுகள் செயல்படுவதை உறுதி செய்ய வேண்டும் என மத்திய அரசுக்கு உத்தரவிட்டுள்ளார்.

இதையும் படிங்க: மணிப்பூர் விவகாரம்: 5வது குற்றவாளி கைது!

பாலியல் தொல்லை தடுப்புக் கொள்கையை வகுக்கும் சட்டப்பூர்வ சட்டம் பெண்களுக்கு எதிரான பாலியல் தொல்லைகள் மற்றும் பாலியல் வன்கொடுமைகளில் இருந்து பாதுகாக்கின்றது. அனைத்து பணியிடங்களிலும் பெண்களுக்கு எதிரான சம்பவங்களில் இருந்து பாதுகாக்கும் வகையில் உள்வட்ட புகார்க்குழு (Internal complaint committee) அமைக்கப்பட்டது.

இதையும் படிங்க: முதியோர் உதவித்தொகை ரூ.1200 ஆக உயர்வு: அமைச்சர் தங்கம் தென்னரசு

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.