ETV Bharat / state

கரோனாவால் பாதிக்கப்பட்டவருக்கு நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை; சென்னை மருத்துவர்கள் சாதனை! - MGM Hospital

சென்னை: கரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டு நுரையீரல் முற்றிலும் செயலிழந்த 48 வயதுடைய ஒருவருக்கு நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சையை சென்னை எம்ஜிஎம் மருத்துவமனை வெற்றிகரமாக செய்து முடித்துள்ளது.

மருத்துவமனை
மருத்துவமனை
author img

By

Published : Aug 30, 2020, 8:29 PM IST

சென்னையில் கடந்த வாரம் தனியார் மருத்துவமனையில் மூளைச்சாவு அடைந்த ஒருவரின் கல்லீரல், இருதயம், நுரையீரல், சிறுநீரகம், கைகள், தோல் ஆகியவை தமிழ்நாடு உறுப்பு மாற்று ஆணையத்தின் மூலம் ஏற்கனவே உறுப்புகளுக்காக பதிவு செய்து காத்திருந்த நோயாளிகளுக்கு வழங்கப்பட்டது.

சென்னை எம்ஜிஎம் மருத்துவமனைக்கு இருதயம் மற்றும் நுரையீரல் தமிழ்நாடு உடல் உறுப்பு மாற்று ஆணையத்தின் மூலம் வழங்கப்பட்டது. தங்கள் மருத்துவமனையில் ஏற்கனவே காத்திருந்த இரண்டு நோயாளிகளுக்கு வெற்றிகரமாக உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்தனர்.

தமிழ்நாட்டில் உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. ஆனால் கரோனா வைரஸ் நோய் தொற்று உள்ளவரின் அருகில் சென்றாலே தங்களுக்கு நோய்த்தொற்று வந்துவிடும் என்பதை பொருட்படுத்தாமல் ஆயிரக்கணக்கான மருத்துவர்கள் நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர். ஆனால் நோய் தொற்றினால் பாதிக்கப்பட்ட ஒருவருக்கு ஆசியாவிலேயே முதல் முறையாக நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்து சாதனை படைத்துள்ளனர்.

இது குறித்து எம்ஜிஎம் மருத்துவமனையின் இருதயம் மற்றும் நுரையீரல் உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை தலைவர் பாலகிருஷ்ணன் பேசுகையில், ''கரோனா வைரஸால் நுரையீரல் பாதிக்கப்பட்ட 48 வயதுடைய ஆண் டெல்லி மருத்துவமனையில் ஒரு மாதம் சிகிச்சை பெற்றார். அந்த சிகிச்சையில் முன்னேற்றம் ஏற்படாததால், ஏர் ஆம்புலன்ஸ் மூலம் 45 நாள்களுக்கு முன்பு சென்னை வந்தார்.

அவருக்கு ரத்தத்தில் ஆக்சிஜன் அளவு குறைவாக இருந்ததுடன் ரொம்ப நாள்கள் படுத்தப்படுக்கையாக இருந்ததால் கை, கால்கள் கூட அசைக்க முடியாத நிலையில் இருந்தார். இதனால் அவருக்கு எக்மோ மிஷின் மூலம் ஆக்சிஜன் வழங்கப்பட்டது.

பின்னர் சிடி ஸ்கேன் செய்து பார்த்ததில் நுரையீரல் அதிக அளவில் பாதிக்கப்பட்டு இருந்தது கண்டறிந்தோம். 48 வயதான இவருக்கு அறுவை சிகிச்சை செய்தால் மேலும் 30 ஆண்டுகள் உடல் வலுவாக இருக்கும் என்பதை உறுதி செய்தோம். எனவே அவருக்கு இரண்டு நுரையீரலும் அறுவை சிகிச்சை செய்து உள்ளோம். அவை தற்போது நன்றாக இயங்குகின்றன.

சென்னை மருத்துவர்கள் சாதனை

எந்தவித இயந்திர உதவியும் இன்றி அவரே மூச்சு விடுகிறார். ரத்தத்தில் ஆக்சிஜன் அளவு 100 விழுக்காடு இருக்கிறது. இவை அனைத்தும் நன்றாக இருந்தால் ஒரு மாதத்தில் அவர் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்படுவார்.

கரோனா வைரஸ் பாதிக்கப்பட்ட நபருக்கு முதல் முறையாக நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்வதில் அதிக அளவில் சவால்கள் இருந்தன. இந்த அறுவை சிகிச்சையில் ஈடுபடும் மருத்துவர்களுக்கும் செவிலியர்களுக்கும் நோய் தொற்று ஏற்படுவதற்கு வாய்ப்பு இருக்கிறது. நோயாளிக்கு கரோனா வைரஸ் நெகட்டிவாக இருந்தாலும், நுரையீரலை வெட்டி தைக்கும் போது மற்றவர்களுக்கும் பாதிப்பு ஏற்படும். எனவே தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு அறுவை சிகிச்சை செய்தோம்.

மேலும் 35 நாட்கள் எக்மோ சிகிச்சையில் இருந்ததால் உடலில் சத்து இல்லாமல் இருந்தார். தசைகள் அசையாமல் இருந்தன. இவருக்கு ஆபரேஷன் செய்யாவிட்டால் பிழைப்பதற்கு வழி இல்லை என்பதால் சவால்களை எதிர்கொண்டு ஆபரேஷன் செய்தோம்'' என தெரிவித்தார்.

இதைத் தொடர்ந்து இருதயம் மற்றும் நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சையின் இணை இயக்குநர் மருத்துவர் சுரேஷ் ராவ் பேசுகையில், ''காசியாபாத்தில் 48 வயதுடைய ஆண் ஒருவருக்கு ஜூன் 7ஆம் தேதி கரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டது. ஒருவாரம் நோயிலிருந்து அவருக்கு நுரையீரலில் பாதிப்பு ஏற்பட்டு ரத்தத்தில் ஆக்சிஜன் அளவு குறைந்து உள்ளது.

சென்னை வந்த அவருக்கு ECMO சிகிச்சை மூலம் சுவாசம் அளிக்கப்பட்டது. ஆனாலும் அவருக்கு ஆக்சிஜன் அளவு அதிகரிக்கவில்லை. பின்னர் அறுவை சிகிச்சை தான் செய்ய வேண்டும் என முடிவு செய்தோம். அதைத் தொடர்ந்து அவருக்கு நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்ய முடிவு செய்யப்பட்டது. அவருக்கு அதிர்ஷ்டவசமாக 27ஆம் தேதி மூளைச்சாவு அடைந்த ஒருவரின் நுரையீரல் எம்ஜிஎம் மருத்துவமனைக்கு கிடைத்தது.

உடனடியாக மருத்துவர்கள் அங்கு சென்று ஆய்வு செய்தனர். பின்னர் நுரையீரல் மாற்று சிகிச்சையை முன்னெச்சரிக்கையுடன் செய்தோம். தற்போது அவரின் நுரையீரல் நன்றாக செயல்படுவதால் அவருக்கு எக்மோ சிகிச்சையையும் நீக்கி உள்ளோம்'' என்றார்.

இதையும் படிங்க:புனே டூ ஹைதராபாத் : ஒரு மணி நேரத்தில் அறுவை சிகிச்சைக்காக எடுத்துச் செல்லப்பட்ட நுரையீரல்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.