மெட்ரோ ரயில் முதற்கட்ட விரிவாக்கத்தின் வழித்தடமான வண்ணாரப்பேட்டை முதல் விம்கோ நகர் வரையிலான, மெட்ரோ ரயிலை சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கிலிருந்து பிரதமர் மோடி கொடியசைத்து தொடங்கிவைத்தார். இந்த மெட்ரோ ரயில் விரிவாக்க பணிகள் 3 ஆயிரத்து 770 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 9.05 கி.மீ தூரம் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த மெட்ரோ ரயிலை பெண் ஓட்டுநர் ரீனா ஆறுமுகம் இயக்கி சென்றார். எட்டு உயர் மேம்பால ரயில் நிலையங்களும், இரண்டு சுரங்க ரயில் நிலையங்களும் இந்த வழித்தடத்தில் அமைந்துள்ளன. இந்த மெட்ரோ ரயில் மூலம் வடசென்னை மக்கள் நகரில் உள்ள பல இடங்களுக்கு வாகன நெரிசலின்றி சென்று வர ஏதுவாக அமைந்துள்ளது.
மெட்ரோ ரயில் விரிவாக்கத்தின் முதல் வழித்தடமான வண்ணாரப்பேட்டை முதல் விம்கோ நகர்வரை இன்று(பிப்.14) ரயில் தொடங்கப்படுவதையொட்டி இன்று ஒரு நாள் பகல் 2 மணி முதல் இரவு 11 மணிவரை மெட்ரோ ரயிலில் பொதுமக்கள் இலவசமாக பயணிக்கலாம் என மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க:மீண்டும் தமிழ்நாடு வரும் மோடி