சென்னை: போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் சென்னையில் மெட்ரோ ரயில் திட்டம் கொண்டு வரப்பட்டது. சென்னையில் மெட்ரோ ரயிலின் திட்டப்பணிகள் இரண்டு கட்டங்களாக அமல்படுத்தபட்டு வருகின்றது. அதில் முதலாம் கட்ட திட்டத்தில், இரண்டு வழித்தடங்களாக, சென்னை சென்ட்ரல் முதல் பரங்கிமலை வரையும் மற்றும் விம்கோ நகர் முதல் விமான நிலையம் வரையும் மெட்ரோ ரயில் சேவை வழங்கப்பட்டு வருகிறது.
அதைத் தொடர்ந்து சென்னையில் தற்போது, 2-ஆம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தில், 116.1 கி.மீ. தூரத்திற்கு 3 வழித்தடங்களில் பணிகள் நடைபெற்று வருகின்றன. மாதவரம் - சிறுசேரி வரையிலும், கலங்கரை விளக்கம் - பூந்தமல்லி வரையிலும், மாதவரம் - சோழிங்கநல்லூர் வரையிலும் தற்போது 45-க்கும் மேற்பட்ட இடங்களில் உயர்மட்டபாதை, சுரங்கப் பாதை மற்றும் ரயில் நிலையங்கள் அமைக்கும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.
இதில் 40 கி.மீ-க்கு மேல், பூமிக்கு அடியில் மெட்ரோ ரயில்பாதைகள் அமைத்து, 48 ரயில் நிலையங்கள் அமைக்கப்படவுள்ளன. இதைத் தொடர்ந்து, 4-ஆம் வழித்தடமான கலங்கரை விளக்கம்-பூந்தமல்லி வழித்தடத்தில், உயர்மட்ட பாதையானது 40% சதவீதம் முடிவடைந்த நிலையில், தற்போது கலங்கரை விளக்கத்தில், சுரங்கம் தோண்டும் பணியானது இன்று (செப்-01) தொடங்கியுள்ளது.
-
Launching of 1st Tunnel Boring Machine (Flamingo - S1352A) for corridor 4, UG 01 at Light House Station, Today (01.09.2023)#ChennaiMetroRail #ChennaiMetro #cmrl #metrorail pic.twitter.com/seMbtEqnaL
— Chennai Metro Rail (@cmrlofficial) September 1, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Launching of 1st Tunnel Boring Machine (Flamingo - S1352A) for corridor 4, UG 01 at Light House Station, Today (01.09.2023)#ChennaiMetroRail #ChennaiMetro #cmrl #metrorail pic.twitter.com/seMbtEqnaL
— Chennai Metro Rail (@cmrlofficial) September 1, 2023Launching of 1st Tunnel Boring Machine (Flamingo - S1352A) for corridor 4, UG 01 at Light House Station, Today (01.09.2023)#ChennaiMetroRail #ChennaiMetro #cmrl #metrorail pic.twitter.com/seMbtEqnaL
— Chennai Metro Rail (@cmrlofficial) September 1, 2023
இது குறித்து சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் தெரிவித்ததாவது, “கலங்கரை விளக்கத்திலிருந்து பூந்தமல்லி வரை 26.1 கி.மீ தூரத்தில், 9 சுரங்கப் பாதை மெட்ரோ ரயில் நிலையங்களும், 18 உயர்மட்ட மெட்ரோ ரயில் நிலையங்களும் அமைக்கப்படவுள்ளது. இதில் மெரினா கடற்கரையில் உள்ள கலங்கரை விளக்கம் மெட்ரோ நிலையத்திலிருந்து கோடம்பாக்கம் மேம்பாலம் வரை சுரங்கப் பாதை கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது.
வழித்தடம் 4, சுரங்கப் பாதை மெட்ரோ ரயில் நிலையங்கள் 10 கி.மீ. நீளத்திற்கு, கலங்கரை விளக்கத்தில் தொடங்கி, சென்னையின் முக்கிய பகுதிகளான மயிலாப்பூர், கட்சேரி சாலை வழியாக ஆழ்வார்பேட்டை, பாரதிதாசன் சாலை, போட் கிளப், பனகல் பார்க் மற்றும் கோடம்பாக்கம் வழியாக செல்கிறது.
இந்த வழித்தடத்தில் சுரங்கப் பாதை பகுதிகள் இரண்டு தொகுதிகளாகப் பிரிக்கப்பட்டு, சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் ஒப்பந்ததாரர் ITD சிமென்டேஷன் இந்தியா நிறுவனம் மூலம் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றது. இந்த வழித்தடத்தில் நான்கு சுரங்கம் தோண்டும் இயந்திரங்கள் (flamingo, eagle, peacock, and pelican) பயன்படுத்தப்படுகின்றன. ஃபிளமிங்கோ மற்றும் கழுகு, கலங்கரை விளக்கத்திலிருந்தும், மயில் மற்றும் பெலிகன், பனகல் பூங்காவிலிருந்தும் சுரங்கம் தோண்டும் பணியை தொடங்கும்.
மெட்ரோ ரயில் திட்டத்தின் கட்டம் 2, வழித்தடம் 4-ல் சுரங்கப் பாதை கட்டுமான பணிகளில், முதல் சுரங்கம் தோண்டும் இயந்திரம் ஃபிளமிங்கோ கலங்கரை விளக்கம் முதல் திருமயிலை மெட்ரோ வரையிலான 1.96 கி.மீ நீளத்திற்கு சுரங்கம் அமைக்கும் பணியை இன்று (செப்ட்-1) சென்னை கடற்கரை அருகில் கலங்கரை விளக்கத்தில் தொடங்கியுள்ளது.
இந்த சுரங்கம் தோண்டும் இயந்திரம் வழித்தடம்-4 இல் பூமிக்கு அடியில் 30 மீ ஆழத்தில் கீழ்நிலையில் கலங்கரை விளக்கத்தில் தொடங்கப்பட்டு, கட்சேரி சாலை வழியாக திருமயிலை நிலையத்தை ஒரு வருட காலத்தில் வந்தடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பின்னர், ஆழ்வார்பேட்டை, பாரதிதாசன் சாலை, போட் கிளப், பனகல் பார்க் மற்றும் கோடம்பாக்கம் வழியாக சுரங்கம் தோண்டப்பட்டு இறுதியாக மே 2026-இல் போட் கிளப்பை வந்தடையும் என எதிர்பார்க்கப்படுகிறது" என மெட்ரோ ரயில் நிறுவனம் சார்பில் தெரிவிக்கபட்டுள்ளது.
இதையும் படிங்க: 8 மாதங்களில் 5 கோடி..! அதிகரிக்கும் மெட்ரோ ரயில் பயணிகளின் எண்ணிக்கை..!