ETV Bharat / state

'காரைக்கால், நாகை உள்ளிட்ட மாவட்டங்களில் 140கி.மீ வேகத்தில் காற்று வீசக்கூடும்'- வானிலை ஆய்வு மையம் - nivar cyclone update

நாளை மாலை அதி தீவிர புயலாக கரையைக் கடக்கும்போது, காரைக்கால், நாகை உள்ளிட்ட மாவட்டங்களில் 120 முதல் 130கி.மீ வேகத்தில் காற்றுவீசும் என்றும் சமயத்தில் காற்றின் வேகம் 140கி.மீ வரை இருக்கும் என்றும் வானிலை ஆய்வு மைய தென்மண்டலத் தலைவர் பாலசந்திரன் தெரிவித்துள்ளார்.

nivar cyclone update  metro Balachandran
இந்திய வானிலை ஆய்வு மைய தென்மண்டலத் தலைவர் பாலசந்திரன்
author img

By

Published : Nov 24, 2020, 7:17 PM IST

சென்னை: இந்திய வானிலை ஆய்வு மைய தென்மண்டலத் தலைவர் பாலசந்திரன் நிவர் புயல் குறித்த தகவல்களை செய்தியாளர்களைச் சந்தித்து தெரிவித்தார். அப்போது, "தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் புதுச்சேரிக்கு தென்கிழக்கே 380 கி.மீ தொலைவிலும் சென்னையிலிருந்து 430 கி.மீ தொலைவிலும் நிவர் புயல் நிலை கொண்டுள்ளது. அது மணிக்கு 5 கி.மீட்டர் வேகத்தில் நகரத் தொடங்கியுள்ளது. இதையடுத்து வருகின்ற 12மணி நேரத்தில் தீவிரப் புயலாகவும், அதைத்தொடர்ந்து அதி தீவிரப் புயலாகவும் மாறக்கூடும்.

இந்திய வானிலை ஆய்வு மைய தென்மண்டலத் தலைவர் பாலசந்திரன்

வடமேற்கு திசையில் நகர்ந்து காரைக்கால், மாமல்லபுரத்திற்கும் இடையே புதுச்சேரிக்கு அருகில் நாளை மாலை அதி தீவிர புயலாக கரையைக் கடக்கும். காரைக்கால், நாகை, கடலூர், புதுவை, மயிலாடுதுறை, செங்கல்பட்டு மாவட்டங்களில் மணிக்கு காற்றின் வேகம் 120 முதல் 130 கி.மீ ஆக இருக்கும்.

திருவள்ளூர், காஞ்சிபுரம், சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களில் 80 முதல் 90 கி.மீ வேகத்தில் சமயங்களில் 100 கி.மீ வேகத்தில் காற்று வீசக்கூடும். காலை 8.30 மணி முதல் சென்னை நுங்கம்பாக்கம், மீனம்பாக்கம் பகுதியில் பெய்த மழையின் அளவு 96.3 மி.மீ. சென்னையில் கனமழை முதல் மிக கனமழை பெய்யக்கூடும்" என்றார்.

இதையும் படிங்க: குளம்போல் நிரம்பிய ஓடுபாதை : தரையிறங்க முடியாமல் வானில் வட்டமடித்த விமானங்கள்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.