இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன் செய்தியாளர்களைச் சந்தித்து பேசுகையில், "தமிழ்நாடு, புதுச்சேரியில் அடுத்த 24 மணிநேரத்தில் வெப்பச்சலனம், வளிமண்டல சுழற்சி காரணமாக பெரும்பாலான மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது.
கடந்த 24 நேரத்தில் அதிகபட்சமாக அரியலூர் மாவட்டம் ஜெயம்கொண்டத்தில் 14 செ.மீ. மழையும் நாகப்பட்டினம் மாவட்டம் மயிலாடுதுறையில் 13 செ.மீ. மழையும் திருவள்ளுவர் மாவட்டம் திருத்தணியில் 11 செ.மீ. மழையும் பதிவாகியுள்ளது.
சென்னையைப் பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில இடங்களில் மாலை அல்லது இரவு நேரங்களில் மழை பெய்யக்கூடும்" எனத் தெரிவித்தார்.
மேலும், இந்த ஆண்டிற்கான வடகிழக்குப் பருவமழை பற்றிய எந்தத் தகவலும் கிடைக்கப்பெறவில்லை எனக் கூறினார்.