சென்னை: கடந்த வாரம் வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில், சென்னை மட்டுமின்றி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் விட்டு விட்டு மழை பொழிந்து வருகிறது. மேலும் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் இரண்டு நாட்களாக மழை பெய்து வருகிறது.
தற்போது தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதியில், ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுவதால், சென்னை உட்பட அனைத்து மாவட்டங்களிலும் மழை பெய்து வருகிறது. தற்போது வடகிழக்கு பருவ மழை இயல்படை விட 40 சதவீதம் குறைவாக பதிவாகி உள்ளது.
இது குறித்து வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல இயக்குநர் பாலச்சந்திரன் கூறுகையில், “கடந்த 24 மணி நேரத்தில், தென் தமிழகதில் பெரும்பாலன இடத்திலும், வட தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும் மழை பதிவாகி உள்ளது. அதிகபட்சமாக சிதம்பரத்தில், 8.செ.மீ மழை பதிவாகி உள்ளது.
தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதியில், ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுவதால், இதன் காரணமாக அடுத்த 3- தினங்களுக்கு தமிழ்நாடு, புதுவை, காரைக்கால் பகுதியில், லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.
மேலும், கனமழை பொருத்தவரை அடுத்த 24- மணி நேரத்திற்கு நெல்லை, கன்னியாகுமரி, தென்காசி, திண்டுக்கல், தேனி, மாவட்டங்களில், கன மழை முதல் மிக கன மழைக்கும், விருதுநகர், மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை, திருப்பூர், கோயம்புத்தூர், நீலகிரி, ஈரோடு, தூத்துக்குடி மற்றும் இராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில், ஓரிரு இடங்களில் கனமழைக்கும் வாய்ப்புள்ளது.
சென்னை மற்றும் புறநகரில் லேசனா மழை பெய்யும். அவ்வேப்போது பலத்த மழை இருக்க கூடும். வடகிழக்கு பருவமழை பொருத்த வரை தமிழகம், புதுவை, காரைக்கால் ஆகிய இடங்களில் இன்றைய காலக்கட்டத்தில், அக்டோபர் 1ஆம் தேதி முதல் நவம்பர் 3ஆம் தேதி வரை 12.செ.மீ மழை அளவு பதிவாகி உள்ளது. இயல்பாக 17.செ.மீ இருக்க வேண்டும், ஆனால் 40 சதவீதம் குறைவாக பதிவாகி உள்ளது.
தற்போது பெய்து வரும் மழையானது, தீவிரம் என்று கூறமுடியாது. தற்போது, பரவலாக மழை பெய்து வருகிறது என்று தான் கூற முடியும். மேலும் காற்றின் ஈரப்பதம் உயர்ந்துள்ளது. தற்போது வழுவிழந்து இருப்பதால், மேகங்கள் ஆங்காங்கே உருவாகி, மழை பெய்து வருகிறது” என்றார்.
மேலும், இந்திய பெருங்கடல் டைப்போல் குறித்து பேசுகையில், “ஒரு குறிப்பிட காரணத்தால் எல் நினோ, ஐஓடி என்று இருக்கிறது. மேலும், வானிலை பொருத்தவரை உலக அளவு, தேசிய அளவு, தமிழக அளவு வைத்து தான் மழையைக் கூற முடியும்.
இந்திய பெருங்கடல் டைப்போல் ஆல் பருவமழையின் அளவு 40% குறைவு என்று சொல்ல முடியாது. அக்டோபர் மாத தொடக்கத்தில் வழுவிழந்து இருந்தது, தற்போது கிழக்கு நோக்கி மேகங்கள் உருவாகி வருகிறது. மேலும், ஒரு சம்பவத்தை வைத்து நம்மால் மழை அளவு ஏன் குறைந்தது என்று கூற முடியாது” என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: தந்தை விற்பனை செய்த இடத்தை போலி ஆவணம் மூலம் மறு விற்பனை.. நூதன மோசடி செய்த மகன்கள், மகள்கள் கைது!