ETV Bharat / state

தமிழகத்தில் 38 நாட்களில் மழை குறைவு.. ஆனால் 7 நாட்களில் அதிகம்..! வானிலை ஆய்வு மையம் தகவல்.. - rainfall

weather report: தமிழகத்தில் கடந்த 38 நாட்களில் மழையானது இயல்பை விட 23% குறைவாகப் பதிவாகி உள்ளதாகவும், நவம்பர் மாதத்தில் 7 நாட்களில் 39% கூடுதலாகப் பெய்துள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Meteorological Department said 77 mm rain has fallen in Tamil Nadu in the last 7 days
தமிழகத்தில் கடந்த 7 நாட்களில் பெய்த மழை அளவு
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 7, 2023, 7:03 PM IST

சென்னை: தமிழகத்தில் கடந்த 7 நாட்களில் (நவ-1 முதல் நவ-7) மொத்தமாக 77.44 மீ.மீ மழைப் பதிவாகி உள்ளது. தமிழகத்தில் தொடர்ந்து பரவலாக பல்வேறு மாவட்டங்களில் வடகிழக்கு பருவமழை பெய்து வருகிறது. இதில் ஒரு சில மாவட்டங்களில் கன மழையும், ஒரு சில மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பதிவாகி உள்ளது.

சென்னையில், அவ்வப்போது லேசான மழையானது ஓரிரு பகுதிகளில் மட்டும் பெய்து வருகிறது. இந்நிலையில், அடுத்த 2 நாட்களுக்குத் தமிழகத்தில் கன மழைக்கு வாய்ப்புள்ளதாகச் சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், கடந்த 24 மணி நேரத்தில், தமிழகத்தில் அதிகபட்சமாக, ஈரோடு மாவட்டம் பவானி பகுதியில் 12.செ.மீ மழை அளவு பதிவாகி உள்ளது.

மேலும், நவம்பர் மாத தொடக்கத்தில் இருந்தே தமிழகத்தின், பெரும்பாலான மாவட்டங்களில் வடகிழக்கு பருவமழை தொடர்ந்து பரவலாகப் பெய்து வந்தாலும், இன்னும் தீவிரம் காட்டவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த பருவமழையானது, மேற்கு மாவட்டங்கள், தென் மாவட்டங்கள், சில உள் மாவட்டங்கள், வடமேற்கு மாவட்டங்கள், கடலோர மாவட்டங்களில் தான் பரவலாகப் பெய்து வருகிறது.

மேலும், இப்பகுதிகளில் இயல்பை விட அதிகமாக மழைப் பதிவாகி உள்ளது. வேலூர், திருச்சி, சென்னை, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, உள்ளிட்ட சில மாவட்டங்களில் இயல்பை விடக் குறைவாக மழைப் பதிவாகி உள்ளது.

மழைப் பதிவுகள்: கடந்த 24 மணி நேரத்தில், தமிழகத்தில் அதிகபட்சமாக, ஈரோடு மாவட்டம் பவானி பகுதியில் 12.செ.மீ மழை அளவு பதிவாகி உள்ளது. இதே போல், சிவலோகம் (சிற்றாறு-II) (கன்னியாகுமரி) பகுதியில் தலா 12 செ.மீ மழை அளவும், ராஜபாளையம் (விருதுநகர்), ஸ்ரீவில்லிபுத்தூர் (விருதுநகர்) தலா 11 செ.மீ மழையும், தொண்டி (ராமநாதபுரம்) பகுதியில் 10 செ.மீ மழை அளவும் பதிவாகி உள்ளது.

மாம்பழத்துறையாறு (கன்னியாகுமரி), அணைகெடங்கு (கன்னியாகுமரி), சிற்றாறு-I (கன்னியாகுமரி), ஓட்டப்பிடாரம் (தூத்துக்குடி), மதுரை விமானநிலையம், பேச்சிப்பாறை (கன்னியாகுமரி), தக்கலை (கன்னியாகுமரி), சின்னக்கல்லார் (கோயம்புத்தூர்), திருமங்கலம் (மதுரை), அருப்புக்கோட்டை KVK AWS (விருதுநகர்), குண்டேரிப்பள்ளம் (ஈரோடு), கோவிலாங்குளம் (விருதுநகர்) பகுதிகளில் தலா 9 செ.மீ மழை அளவு பதிவாகி உள்ளது.

மேலும், தமிழகத்தில் புதுக்கோட்டை, கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, மதுரை, கோவை, சென்னை, தர்மபுரி, கடலூர், காஞ்சிபுரம், தேனி, நீலகிரி, திருவள்ளூர், செங்கல்பட்டு, திருப்பூர், ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், கிருஷ்ணகிரி, வேலூர், கள்ளக்குறிச்சி, பெரம்பலூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழைப் பதிவாகி உள்ளது எனச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கடந்த 38 நாட்களில்: தமிழகத்தில் கடந்த 38 நாட்களில், (அக்டோபர் 1-ஆம் தேதி முதல் நவம்பர் 7ஆம் தேதி வரை) மொத்தமாகப் பதிவான மழை அளவு 176.0 மீ.மீ., இந்த காலகட்டத்தில், 227.7 மீ.மீ மழை அளவு பதிவாக வேண்டும். ஆனால் இயல்பை விட 23% குறைவாகப் பதிவாகி உள்ளது.

நவம்பர் மாதத்தை மட்டும் ஒப்பிட்டுப் பார்த்தால், 7 நாட்களில் (நவம்பர் 1 முதல் நவம்பர் 7) தமிழகத்தில் மொத்தமாக 77.44 மீ.மீ அளவு மழைப் பதிவாகி உள்ளது. இது நவம்பர் மாதம் தொடக்கத்தில் 39% கூடுதலாகப் பதிவாகி உள்ளது எனச் சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க: தென்காசி காசி விஸ்வநாத கோயிலில் ஐப்பசி திருக்கல்யாண தேரோட்டம் கோலாகலம்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.