இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம், "தமிழ்நாடு, புதுச்சேரியில் அடுத்த 24 மணி நேரத்திற்கு மிதமானது முதல் லேசான சாரல் மழைக்கு வாய்ப்புள்ளது. சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படுவதுடன், இரவில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது.
குறிப்பாக, தூத்துக்குடி, வேலூர், தஞ்சாவூர், விருதுநகர், சிவகங்கை உள்ளிட்ட ஒன்பது மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது. மேலும், குமரிக்கடல், மாலத்தீவு பகுதிகளுக்கு மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது" எனத் தெரிவித்துள்ளது.