மெரினா கடற்கரையில் பலர் சிறு கடைகள் வைத்து வியாபாரம் செய்து வந்தனர். கரோனா ஊரடங்கால் அவர்கள் வாழ்வாதாரம் இழந்து தவித்தனர். கடந்த சில மாதங்களுக்கு முன் கடற்கரையை அழகுப்படுத்துதல் உள்ளிட்ட திட்டங்களுக்காக அங்குள்ள கடைகள் முழுவதும் அகற்றப்பட்டன.
அதனைத் தொடர்ந்து வியாபாரிகள் நீதிமன்றத்தை நாடினர். இந்த வழக்கில் ஓய்வு பெற்ற நீதிபதி சதீஷ் அக்னி கோத்ரி தலைமையிலான தனிக் குழு மெரினா கடற்கரையில் 900 கடைகளை மாநகராட்சி அமைத்து தர வேண்டும் என உத்தரவிட்டது.
அதன்படி மாநகராட்சி சார்பில் 900 கடைகளுக்கு விண்ணப்பப் படிவம் வழங்கப்பட்டது. பழைய வியாபாரிகளை தவிர்த்து புதிய கடைகளை அமைக்க விரும்புபவர்களுக்கு அதிக முன்னுரிமை மாநகராட்சி அளிப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இதனால் சென்னை காமராஜர் சாலை அருகே பாதிக்கப்பட்ட வியாபாரிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதன் காரணமாக அங்கு 100க்கும் மேற்பட்ட காவல் துறையினர் குவிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
இதையும் படிங்க: சிறையில் கைதி கொலை - உறவினர்கள் போராட்டம்!