சென்னை வண்ணாரப்பேட்டை தட்டான்குளம் பகுதியில் வசித்துவருபவர் ரவி. இவர் தனது மனைவி சாவித்திரியுடனும் தனது தாயாருடனும் ஒன்றாக வசித்து வருகின்றார்.
ரவிக்கு சற்று மனநலம் பாதிக்கப்பட்டு இருந்ததால் அவர் சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்நிலையில் இன்று காலை ரவி வீட்டு வாசலில் அங்கும் இங்குமாக சுற்றித்திரிந்து உள்ளார்.
இதனை கண்ட ரவியின் தாயார் சாவித்திரி எங்கே என கேட்டுள்ளார். அதற்கு பதில் ஏதும் கூறாமல் சிரித்தபடி ரவி நின்றுள்ளார்.
இதனையடுத்து ரவியின் தாயார் உள்ளே சென்று பார்த்தபோது தலையில் ரத்தக் காயங்களுடன் சாவித்திரி இறந்த நிலையில் இருப்பது தெரிய வந்தது.
இதனையடுத்து அக்கம்பக்கத்தினர் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். பின்னர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கொருக்குப்பேட்டை காவல்துறையினர் விசாரணை செய்ததில் மனநலம் பாதிக்கப்பட்ட ரவி, சாவித்திரியை தலையில் சுத்தியால் அடித்து கொலை செய்தது தெரியவந்தது.
இதன் பின்னர் காவல்துறையினர் ரவியை கைது செய்தனர். பின்னர் சாவித்திரியின் உடலை உடற்கூறு ஆய்வுக்காக அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க... தமிழ்நாட்டில் தொடரும் பெண் சிசு கொலைகள்; தாயே குழந்தையைக் கொன்று வீசிய கொடூரம்!