சென்னை: தமிழ்நாட்டில் சென்னை புறநகர்ப் பாதைகளில் மட்டுமே மின்சார ரயில்கள் இயக்கப்பட்டுவந்தன. தற்போது முதல் முறையாக சேலம்-அரக்கோணம் வழியே நெடுந்தொலைவு மின்சார ரயில் இயக்கப்படும் எனத் தென்னக ரயில்வே அறிவித்தது.
இந்த ரயில் சேவை இன்றுமுதல் தொடங்கி செயல்படுகிறது. வாரத்தில் சனி, ஞாயிறு ஆகிய நாள்களைத் தவிர்த்து ஐந்து நாள்களிலும் இந்த ரயில் இயக்கப்படுகிறது. முன்பதிவு வசதி உள்ளிட்ட சில முக்கிய அம்சங்கள் இந்த ரயிலில் இணைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காலை 5.15 மணிக்கு அரக்கோணத்திலிருந்தும், மதியம் 3.3. மணிக்கு சேலத்திலிருந்தும் இரு மார்க்கமாக இந்த ரயில் இயக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ரயிலுக்குப் பயணிகள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
இதையும் படிங்க: கரோனா சிகிச்சை மையமாக மாறிய ரயில் பெட்டி- புகைப்படத் தொகுப்பு!