தேனி: சின்னமனூர் அருகே உள்ள மேகமலை வனச்சரகப் பகுதியில் சுமார் 7 ஊர்கள் உள்ளன. ஏழு ஊர்களையும் உள்ளடக்கிய நெடுஞ்சாலையில் ஹைவேவிஸ் பேரூராட்சி அமைக்கப்பட்டுள்ளது.
இந்தப் பகுதியில் வாழும் மக்கள் இரவு நேரங்களில் சென்று வருவதற்கு வனத்துறையினர் அதிகப்படியான கெடுபிடிகள் போடுவதால் பொதுமக்கள் அனைவரும் சிரமத்துக்கு உள்ளாவதாகக்கூறி, அப்பகுதி பொதுமக்கள் சுமார் 50க்கும் மேற்பட்டோர் சின்னமனூர் அருகே உள்ள தென்பழனி - மேகமலை வனச்சரக சோதனைச்சாவடி முன்பு திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சம்பவ இடத்திற்கு வருகை தந்த காவல் துறையினர் மற்றும் வனத்துறையினர் போராட்டத்தில் ஈடுபட முயற்சி செய்தவர்களைத் தடுத்து நிறுத்தி, அவர்களைக் கைது செய்து காவல்துறை வாகனத்தில் ஏற்றிச்சென்று ஓடைப்பட்டியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் அடைத்து வைத்தனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் கூறுகையில், 'சுற்றுலாவிற்கு வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு எந்த ஒரு கெடுபிடியும் வனத்துறையினர் போடுவதில்லை. ஆனால், 40 ஆண்டு காலம் வாழும் எங்களை புதிது புதிதாக கெடுபிடிகள் போட்டு கஷ்டத்துக்கு உள்ளாக்குகிறார்கள். எங்களால் துக்க நிகழ்ச்சிகளுக்குக் கூட குறித்த நேரத்திற்கு செல்ல முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது' என வேதனைத் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: வெள்ளக்காடான ராசிபுரம் - அமைச்சர்கள் வராததால் மக்கள் வேதனை!