சென்னை : இந்தியாவில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் கரோனா தொற்று காரணமாக நாடு தழுவிய ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டது. பின்னர் படிப்படியாக ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்டுவந்தன.
அதன்படி, தமிழ்நாட்டிலும் தளர்வுகளுடன்கூடிய ஊரடங்கு நடைமுறையில் உள்ளது. ஏற்கனவே நடைமுறையில் உள்ள ஊரடங்கு நாளையுடன் (நவம்பர் 30) நிறைவடையவுள்ள நிலையில், ஊரடங்கு நீட்டிப்பு தொடர்பாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் இன்று ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது.
தற்போது ஒமைக்ரான் என்ற உருமாற்றம் அடைந்த கரோனா தொற்றுப் பரவிவருவதால், ஊரடங்கை நீட்டிப்பதுடன் கரோனா வழிகாட்டு முறைகளில் கட்டுப்பாடுகளை அதிகரிப்பது குறித்து ஆலோசிக்க வாய்ப்புள்ளது.
இதையும் படிங்க: Corona Vaccine: தமிழ்நாட்டில் 7 கோடி பேருக்கு தடுப்பூசி