ETV Bharat / state

வேடந்தாங்கல் சரணாலயம் வழக்கு - சிறப்புக்குழுவுக்கு மேலும் 2 மாதம் அவகாசம் வழங்கிய பசுமை தீர்ப்பாயம்

சென்னை : வேடந்தாங்கல் சரணாலயத்தை சுற்றி மருந்து கழிவுகள் கொட்டப்படுகிறதா என்பது குறித்து நேரில் ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய சிறப்புக் குழுவுக்கு மேலும் இரண்டு மாதம் அவகாசம் வழங்கி தென்மண்டல பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.

Medicine waste mixing with vedanthangal sanctuary lake, panel time extended,

author img

By

Published : Sep 3, 2020, 9:39 PM IST

சென்னையில் உள்ள தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் மீனவர் நலச்சங்கம் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், "வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்துக்கு மிக அருகில் மதுராந்தகத்தை அடுத்த சாத்தம்மை கிராமத்தில் தனியார் மருந்து நிறுவனம் செயல்பட்டு வருகிறது.

இந்த நிறுவனத்தில் இருந்து வெளியேறும் கழிவுநீர் சரணாலய பகுதியில் உள்ள நீர்நிலைகளிலும், அருகில் உள்ள விவசாய நிலங்களிலும் கலக்கிறது. இதனால், வேடந்தாங்கல் சரணலாயத்துக்கு வரும் பறவைகளுக்கு பாதிப்பு ஏற்படுகிறது. எனவே, அந்த பகுதியில் மருந்து நிறுவனம் செயல்பட தடை விதிக்க வேண்டும்" என்று கூறியிருந்தார்.

மனுவை விசாரித்த தீர்ப்பாயம், மத்திய சுற்றுச்சூழல் துறையின் மூத்த அலுவலர், மத்திய, மாநில மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் மூத்த விஞ்ஞானிகள், காஞ்சிபுரம் ஆட்சியர் உள்ளிட்ட அலுவலர்கள் கொண்ட குழுவை அமைத்து, நேரில் ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டது. இந்தநிலையில் அந்த மனு நீதிபதி கே.ராமகிருஷ்ணன், உறுப்பினர் சாய்பால் தாஸ் குப்தா ஆகியோர் முன்னிலையில் இன்று (செப்டம்பர் 3) விசாரணைக்கு வந்தது. அப்போது, ஆய்வுக்குழு சார்பில் இடைக்கால அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

அதில், மருந்து நிறுவனத்தில் இருந்து வெளியேறும் கழிவுநீர் சரணாலய பகுதியில் உள்ள நீர்நிலைகள், வேடந்தாங்கல் ஏரி மற்றும் விவசாய நிலங்களில் கலக்கிறதா? என்பதை கண்டறிய மாதிரி சேகரிக்கப்பட்டு ஆய்வக பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அதன் முடிவு இதுவரை கிடைக்கப்பெறவில்லை.

இந்த முடிவு கிடைக்கப்பெற்றதும் வேடந்தாங்கல் சரணாலய பகுதியில் நீர் மற்றும் மண்ணின் தரம் எந்த அளவு பாதிக்கப்பட்டுள்ளது? என்பதை மதிப்பிட வேண்டி உள்ளது. இதைத்தொடர்ந்து, இந்த பிரச்னைக்கு எவ்வாறு தீர்வு காண்பது என்பதையும் ஆலோசிக்க வேண்டியது உள்ளது. இந்த பணிகளை முடித்து இறுதி அறிக்கையை தாக்கல் செய்ய மேலும் இரண்டு மாதம் கால அவகாசம் அளிக்க வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.

இதை ஏற்றுக்கொண்ட தீர்ப்பாயம், ஆய்வுக்குழு இறுதி அறிக்கையை தாக்கல் செய்ய இரண்டு மாதம் கால அவகாசம் அளித்து உத்தரவிட்டது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.