ETV Bharat / state

மருத்துவத் தேர்வு முறைகேடு: பல்கலைக்கழகம் தீவிர ஆலோசனை - முறைகேடுகளை தடுப்பது குறித்து ஆலோசனை

சென்னை: தேர்வு முறைகேடுகளைத் தடுப்பது குறித்து தீவிரமாக ஆலோசனை செய்யப்பட்டு வருகிறது என தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் சுதா சேஷய்யன் தெரிவித்துள்ளார்.

medical-university-exam-malpractice
author img

By

Published : Oct 22, 2019, 1:23 PM IST

தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் சுதா சேஷய்யன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், ‘தமிழ்நாடு அரசு தீபாவளி பண்டிகைக்கு அடுத்த நாளான 28ஆம் தேதி விடுமுறையாக அறிவித்துள்ளது. தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழகத்தில் படிக்கும் மாணவர்களுக்கு 28ஆம் தேதி சில தேர்வுகள் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. அரசு விடுமுறை அறிவித்து இருப்பதால் அந்த தேர்வுகள் வேறு தேதிக்கு மாற்றப்படுகின்றன.

முதுகலை மருத்துவப் படிப்பில் மருத்துவம் சார்ந்த படிப்புகளான தேர்வு 28ஆம் தேதி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த தேர்வு நவம்பர் மாதம் 4ஆம் தேதி நடைபெறும். அதேபோல் இந்திய மருத்துவத்திற்கான தேர்வுகள் நவம்பர் மாதம் 9ஆம் தேதி நடைபெறும். இதுகுறித்து கல்லூரி நிர்வாகங்கள் மாணவர்களுக்கு தெரிவிக்க வேண்டும். இரண்டு மருத்துவக்கல்லூரிகளில் தேர்வு மையங்கள் ரத்து செய்தது குறித்து தேர்வு ஒழுங்கு குழு அளித்த பரிந்துரையின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு அது குறித்த விவரங்கள் பல்கலைக்கழகத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.

தேர்வு ஒழுங்கு குழு என்ற அமைப்பு நிலையாக பல்கலைக்கழகத்தில் உள்ளது. இந்தக் குழுவானது தேர்வின்போது நடைபெறும் தவறுகளை பொறுத்து அதன் மீது நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்யும். பல்கலைக்கழக சட்ட விதிகளின் அடிப்படையில் தேர்வு முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை குழு அளித்த பரிந்துரையின் அடிப்படையில் எடுக்கப்பட்ட நடவடிக்கை இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

இந்த இரு கல்லூரிகளிலும் எம்பிபிஎஸ் படிப்பில் பயின்ற அனைத்து மாணவர்களும் அதே கல்லூரியில் தேர்வு எழுதுவதற்கு அந்த கல்லூரியின் மையம் ரத்து செய்யப்பட்டு வேறு கல்லூரியில் மையம் ஒதுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழகத்தின் கட்டுப்பாட்டில் சுமார் 600 கல்லூரிகள் உள்ளன. எம்பிபிஎஸ் படிப்பில் மட்டும் 39 கல்லூரிகள் உள்ளன. இந்தக் கல்லூரிகளில் தேர்வு நடக்கும் பொழுது பல்கலைக்கழகத்திலிருந்து சிசிடிவி மூலம் கண்காணிக்கலாமா? என்பது குறித்து ஆலோசனை செய்து வருகிறோம்.

துணைவேந்தர் சுதா சேஷய்யன் செய்தியாளர்கள் சந்திப்பு

தேர்வு நடக்கும்போது சிசிடிவி மூலம் படிப்படியாக கண்காணிப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது. தேர்வு முறைகேடுகளை தடுப்பது குறித்து தீவிரமாக ஆலோசனை செய்யப்பட்டு வருகிறது. தற்போது தேர்வு ஒழுங்கு குழு அளித்துள்ள பரிந்துரையின் அடிப்படையில் தேர்வு மையங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. தேர்வு முறைகேட்டில் ஈடுபட்ட குறிப்பிட்ட மாணவர்கள் 6 மாதம் மீண்டும் அதே படிப்பை படிக்க வேண்டியுள்ளது. இதுவே அவர்களுக்கு ஒரு தண்டனை’ என தெரிவித்தார்.

இதையும் படிங்க...

'மரங்களை வெட்ட விதிக்கப்பட்ட தடை தொடரும்' - உச்ச நீதிமன்றம்

Intro:மருத்துவ தேர்வு முறைகேடுகளைத் தடுக்க
பல்கலைக்கழகம் தீவிர ஆலோசனை

Body:மருத்துவ தேர்வு முறைகேடுகளைத் தடுக்க
பல்கலைக்கழகம் தீவிர ஆலோசனை
சென்னை,

தேர்வு முறைகேடுகளை தடுப்பது குறித்து தீவிரமாக ஆலோசனை செய்யப்பட்டு வருகிறது என தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் சுதா சேஷய்யன் தெரிவித்தார்.

தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் சுதா சேஷய்யன் செய்தியாளர்களிடம் கூறியதாவது, தமிழக அரசு தீபாவளி பண்டிகைக்கு அடுத்த நாள் 28 ஆம் தேதி விடுமுறையாக அறிவித்துள்ளனர். தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழகத்தில் படிக்கும் மாணவர்களுக்கு 28ஆம் தேதி சில தேர்வுகள் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. அரசு விடுமுறை அறிவித்து இருப்பதால் அந்த தேர்வுகள் வேறு தேதிக்கு மாற்றப்படுகின்றன.

முதுகலை மருத்துவப் படிப்பில் மருத்துவம் சார்ந்த படிப்புகளான தேர்வு 28 ந் தேதி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த தேர்வு நவம்பர் மாதம் 4 ம் தேதி நடைபெறும்.
அதேபோல் இந்திய மருத்துவத்திற்கான தேர்வுகள் நவம்பர் மாதம் 9ந் தேதி சனிக்கிழமை நடைபெறும். இதுகுறித்து கல்லூரி நிர்வாகங்கள் மாணவர்களுக்கு தெரிவிக்க வேண்டும்.

இரண்டு மருத்துவக்கல்லூரிகளில் தேர்வு மையங்கள் ரத்து செய்தது குறித்து தேர்வு ஒழுங்கு குழு அளித்த பரிந்துரையின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு அது குறித்த விபரங்கள் பல்கலைக்கழகத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.
தேர்வு ஒழுங்கு குழு என்ற அமைப்பு நிலையாக பல்கலைக்கழகத்தில் உள்ளது. இந்தக் குழுவானது தேர்வின்போது நடைபெறும் தவறுகளை பொறுத்து அதன் மீது நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்யும்.
பல்கலைக்கழக சட்ட விதிகளின் அடிப்படையில் தேர்வு முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை குழு அளித்த பரிந்துரையின் அடிப்படையில் எடுக்கப்பட்ட நடவடிக்கை இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

இந்த இரு கல்லூரிகளிலும் எம்பிபிஎஸ் படிப்பில் பயின்ற அனைத்து மாணவர்களும் அதே கல்லூரியில் தேர்வு எழுதுவதற்கு அந்த கல்லூரியின் மையம் ரத்து செய்யப்பட்டு வேறு கல்லூரியில் மையம் ஒதுக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழகத்தின் கட்டுப்பாட்டில் சுமார் 600 கல்லூரிகள் உள்ளன. எம்பிபிஎஸ் படிப்பில் மட்டும் 39 கல்லூரிகள் உள்ளன. இந்தக் கல்லூரிகளில் தேர்வு நடக்கும் பொழுது பல்கலைக்கழகத்திலிருந்து சிசிடிவி மூலம் கண்காணிக்கலாமா? என்பது குறித்து ஆலோசனை செய்து வருகிறோம்.
தேர்வு நடக்கும்பொழுது சிசிடிவி மூலம் படிபடிப்படியாக கண்காணிப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது. தேர்வு முறைகேடுகளை தடுப்பது குறித்து தீவிரமாக ஆலோசனை செய்யப்பட்டு வருகிறது.

தற்பொழுது தேர்வு ஒழுங்கு குழு அளித்துள்ள பரிந்துரையின் அடிப்படையில் தேர்வு மையங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. தேர்வு முறைகேட்டில் ஈடுபட்ட குறிப்பிட்ட மாணவர்கள் 6 மாதம் மீண்டும் அதையே படிப்பினை படிக்க வேண்டி உள்ளது. இதுவே அவர்களுக்கு ஒரு தண்டனை என தெரிவித்தார்.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.