சென்னை: நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது நடிகை விஜயலட்சுமி பாலியல் குற்றச்சாட்டுகளை முன்வைத்து புகார்கள் அளித்த நிலையில், இன்று(செப்.7) சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அவருக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது.
2011ஆம் ஆண்டு நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் தன்னை திருமணம் செய்துகொள்வதாகக் கூறி பாலியல் தொந்தரவு கொடுத்ததாக நடிகை விஜயலட்சுமி சென்னை வளசரவாக்கம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில், பாலியல் வன்கொடுமை, பெண் வன்கொடுமை உள்ளிட்ட ஆறு பிரிவின் கீழ் சீமான் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். அதனைத்தொடர்ந்து, சுமுகமாக செல்வதாக விஜயலட்சுமி கடிதம் எழுதி கொடுத்ததால் போலீசார் நடவடிக்கை எடுக்காமல் விசாரணையை கைவிட்டனர்.
இந்நிலையில் சீமான் மீது அளிக்கப்பட்ட பாலியல் புகாரில் அவரை கைது செய்ய வேண்டும் என காவல் ஆணையர் அலுவலகத்தில் நடிகை விஜயலட்சுமி மீண்டும் புகாரளித்தார். புகாரின் அடிப்படையில், சென்னை கோயம்பேடு துணை ஆணையர் உமையாள், விஜயலட்சுமி தலைமையில் குழு அமைக்கப்பட்டு 2 நாட்களாக நடிகை விஜயலட்சுமியிடம் விசாரணை மேற்கொண்டு அவர் தரப்பிலிருந்து விவரங்கள் மற்றும் ஆதாரங்களை கேட்டு பெற்றனர்.
இதையும் படிங்க: சேலத்தில் தொடங்கியது அரசுப் பொருட்காட்சி.. கண்கவர் மினியேச்சர் கால்நடைகள்!
மேலும், விஜயலட்சுமியை திருவள்ளூர் மகிளா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி வாக்குமூலங்களையும் பெற்றனர். புகாரில், சீமான் தன்னை 7முறை வற்புறுத்தி கருக்கலைப்பு செய்ததாக விஜயலட்சுமி தெரிவித்திருந்தார். மேலும், சீமானால் தான் பாலியல் வன்கொடுமை ஆளாக்கட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில், விஜயலட்சுமி அளித்த புகாரின் அடிப்படையில் மருத்துவர் ரீதியிலான ஆதாரங்களை உறுதிப்படுத்த முடியுமா என்ற கோணத்தில் திருக்கழுக்குன்ற பகுதியில் தங்கி இருந்த நடிகை விஜயலட்சுமியை மதுரவாயல் போலீசார், கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மேலும் கருக்கலைப்பு செய்யப்பட்ட மருத்துவரிடமும், கருக்கலைப்பு செய்வது தொடர்பாக கையெழுத்திட்ட நபரிடமும் போலீசார் விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளனர். இந்நிலையில், இரண்டு மணி நேர பரிசோதனைக்குப் பிறகு நடிகை விஜயலட்சுமி மருத்துவ மனையிலிருந்து வீட்டிற்குச் சென்றுள்ளார்.
அதனைத்தொடர்ந்து, மருத்துவ அறிக்கை வந்த பின்பு அடுத்த கட்டண ஆலோசனை மேற்கொண்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் இதன்மூலம் சீமானுக்கு எதிரான வழக்கு விசாரணை மேலும் தீவிரமாகும் என்றும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: இந்திய அரசியல் தலைவர்களில் மூன்றாம் இடம் பிடித்த யோகி.. 'எக்ஸ்' தளத்தில் 26 மில்லியன் பாலோயர்கள்!