ETV Bharat / state

மருத்துவ மாணவி தற்கொலை வழக்கு: சிபிசிஐடி-க்கு மாற்றம்.. - medical student suicide case changed to CBCID

medical student suicide case: கன்னியாகுமரி மாவட்டத்தில் மருத்துவக் கல்லூரி மாணவி தற்கொலை வழக்கை சிபிசிஐடிக்கு மாற்ற வேண்டும் என்று மக்கள் மற்றும் அரசியல் கட்சியினர் வலியுறுத்தியதையடுத்து வழக்கு தற்போது சிபிசிஐடி க்கு மாற்றப்பட்டு விசாரணை தொடங்கியுள்ளது.

மருத்துவ மாணவி தற்கொலை வழக்கு: சிபிசிஐடி-க்கு மாற்றம்..

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 14, 2023, 6:33 PM IST

சென்னை: கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரம் ஸ்ரீமூகாம்பிகா மருத்துவக் கல்லூரி மாணவி தற்கொலை வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றம் செய்ய தமிழக காவல் துறை தலைமை இயக்குநர்சங்கர் ஜிவால் அறிவித்திருந்த நிலையில் தற்போது சிபிசிஐடி விசாரணை தொடங்கியுள்ளது.

ஸ்ரீமுகாம்பிகா மருத்துவக் கல்லூரியில் முதுநிலை இரண்டாம் ஆண்டு படித்து வந்த மாணவி சுகிர்தா (27). இவர் கடந்த 6-ம் தேதி தான் தங்கியிருந்த அறையில் தற்கொலை செய்து கொண்டார். இந்நிலையில் அவரது அறையிலிருந்து கிடைத்த கடிதத்தில் இறப்புக்கான காரணம் எனத் தலைப்பிட்டு 3 பேரின் பெயர்களைக் மாணவி குறிப்பிட்டிருந்தார்.

அதில் பரமசிவன் என்ற பேராசிரியர் பாலியல் துன்புறுத்தல் செய்ததாகவும், டாக்டர் ஹரீஷ் என்ற சீனியர் மாணவர் மற்றும் டாக்டர் பிரீத்தி என்ற சீனியர் மாணவி ஆகியோர் மனதளவில் துன்புறுத்தியதாகவும் குறிப்பிட்டிருந்தார். இதைத் தொடர்ந்து மகளின் இறப்பு செய்தியை கேட்டு தூத்துக்குடியிலிருந்து வந்த மாணவி சுகிர்தாவின் தந்தை, மகளின் இறப்பு குறித்து குலசேகரம் காவல் நிலையத்தில் (அக். 6 ஆம் தேதி இரவு) புகார் அளித்தார்.

இதையும் படிங்க: கன்னியாகுமரி தனியார் மருத்துவக் கல்லூரி முதுகலை மாணவி தற்கொலை.. சிக்கிய கடிதம்!

அந்தப் புகாரில் தனது மகளின் இறப்பில் சந்தேகம் உள்ளதாகக் அவர் குறிப்பிட்டிருந்தார். இதையடுத்து போலீஸார் டாக்டர் பரமசிவன், மாணவர் ஹரீஷ் மற்றும் மாணவி பிரீத்தி ஆகியோர் மீது இந்திய குற்றவியல் சட்டம் 306-ன்படி தற்கொலைக்குத் தூண்டியதாக வழக்குப்பதிவு செய்தனர்.

இந்த வழக்கில் மாணவி கடிதத்தில் குறிப்பிட்டிருந்த 3 பேரிடமும் சாதாரணமாக விசாரணை நடத்திய காவல்துறை கைது போன்ற நடவடிக்கையைக்கூட மேற்கொள்ளாதது சந்தேகத்தை ஏற்படுத்துவதாகவும், விசாரணை துரிதமாக நடைபெறவில்லை என்று புகார் எழுந்தது. இந்நிலையில் இந்த வழக்கை சிபிசிஐடிக்கு மாற்ற வேண்டும் என்று மக்கள் மற்றும் அரசியல் கட்சியினர் வலியுறுத்தினர்.

இந்நிலையில் முன்னதாக பணியிடை நீக்கம் செய்யப்பட்ட மருத்துவர் பரமசிவம், நேற்று கைது செய்யப்பட்டார். அவரை 15 நாட்களுக்கு நீதிமன்ற காவலில் வைக்க வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டார். இந்நிலையில் டிஜிபி சங்கர் ஜிவால் வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றி உத்தரவிட்டதையடுத்து, வழக்கில் சிபிசிஐடி போலீஸார் முதல்கட்ட விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.

இதையும் படிங்க: சேலத்தில் இளம்பெண் தற்கொலை!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.