தமிழ்நாட்டில் கரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. குறிப்பாக, சென்னையில் கரோனா வைரஸ் மின்னல் வேகத்தில், பரவி வருகிறது.
மத்திய அரசு மருத்துவ உபகரணங்கள் அவசரமாக தேவை என்பதால், தாராளமாக இறக்குமதிக்கு அனுமதி வழங்கியுள்ள திட்டத்தின் கீழ், சென்னையில் பல தனியாா் நிறுவனங்கள் வெளிநாடுகளிலிருந்து அதிகளவில் மருத்துவ உபகரணங்களை இறக்குமதி செய்கின்றன.
அந்த வகையில், சென்னை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வந்த சரக்கு விமானங்களில் 180 பார்சல்களில் மருத்துவ உபகரணங்கள் வந்தன.
அதில், சீனாவிலிருந்து 23 பார்சல்களில் சுவாசக்கருவியான வென்டிலேட்டா்கள் தயாரிக்கும் உதிரிப்பாகங்களும், மலேசியா, தாய்லாந்து, தைவான், பிலிப்பைன்ஸ், அமெரிக்கா ஆகிய நாடுகளிலிருந்து வந்த பார்சல்களில் மாஸ்க், கிளவுஸ், சுவாசக்கருவியான நோஸ் பிரிட்ஜ், மருத்துவ உபகரணங்கள் வந்துள்ளன.
இந்த பார்சல்களை சுங்கத் துறையினா் உடனடியாக ஆய்வு மேற்கொண்டு டெலிவரிக்கு அனுப்பி வைத்தனர்.
இதையும் படிங்க: கரோனா வாரியர்ஸை கவுரவித்த தாம்பரம் ரயில் நிலையம்