ETV Bharat / state

'வெளிமாநில மருத்துவ மாணவர்கள் அரசு மருத்துவமனைகளில் பணிபுரிவது கட்டாயம்' - உயர் நீதிமன்றம் உத்தரவு - வெளிமாநில மருத்துவ மாணவர்கள்

medical pg students
medical pg students
author img

By

Published : Oct 6, 2020, 12:08 PM IST

Updated : Oct 6, 2020, 2:06 PM IST

11:56 October 06

சென்னை: அகில இந்திய ஒதுக்கீட்டின் மூலம் தமிழ்நாட்டில் மருத்துவ மேற்படிப்பு படிக்கும் வெளிமாநில மாணவ, மாணவிகள் கட்டாயம் இரண்டு ஆண்டுகள் அரசு மருத்துவமனைகளில் பணிபுரிய வேண்டும் என்ற தமிழ்நாடு அரசின் உத்தரவு செல்லும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழ்நாட்டில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறக்கூடிய மருத்துவக் கல்லூரிகளில், மருத்துவ படிப்புக்கான இடங்களில் எம்பிபிஎஸ் படிப்பில் 50 விழுக்காடு இடங்களும், எம்.டி,எம்.எஸ் உள்ளிட்ட முதுகலை மருத்துவப் படிப்பில் 15 விழுக்காடு இடங்களும் அகில இந்திய தொகுப்பிற்கு ஒதுக்கப்படுகிறது.

முதுகலை மருத்துவப் படிப்பில் அகில இந்திய ஒதுக்கீடு மூலம் தமிழ்நாடு மருத்துவக் கல்லூரிகளில் படிக்க வரும் மாணவர்கள், படித்து முடித்தவுடன் இரண்டு ஆண்டுகள் கட்டாயம் தமிழ்நாடு அரசு மருத்துவமனைகளில் வேலை பார்க்க வேண்டும் என்ற நிபந்தனை விதிக்கப்படுகிறது.

இரண்டு ஆண்டுகள் பணி முடித்தால் மட்டுமே அவர்களுக்கு முழுமையான கல்வி சான்றிதழ் வழங்கப்படுகிறது. இதை எதிர்த்து தமிழ்நாட்டில் படிக்கக்கூடிய வெளிமாநிலத்தை சேர்ந்த அபினயா, அஜய், பாத்திமா உள்ளிட்ட 276 மாணவ, மாணவிகள் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர். 

அதில், அகில இந்திய மருத்துவ படிப்புக்கான தேர்வு குறிப்பேட்டில் இதுபோல் எந்த ஒரு நிபந்தனையும் இல்லை என்றும் இது சட்டவிரோதமானது என்றும் தெரிவித்திருந்தனர். இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி மாணவ, மாணவிகள் இரண்டு ஆண்டுகள் பணிபுரிய வேண்டிய அவசியம் இல்லை என்றும், அவர்களுக்கு உரிய சான்றிதழ்களை படிப்பு முடிந்ததும் வழங்க வேண்டும் என்றும் தீர்ப்பளித்தார்.

தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து தமிழ்நாடு அரசு மேல் முறையீடு செய்தது. இந்த வழக்கின் விசாரணை சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி ஏ.பி. சாஹி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அமர்வில் நடைபெற்றது.

வழக்கு விசாரணையின் போது, மாணவர்கள் சேர்க்கையின் போது மாநில அரசுகள் நிபந்தனை விதித்து கொள்ளலாம் என்று அகில இந்திய மருத்துவ கவுன்சில் விதிகள் உள்ளதால், தமிழ்நாடு அரசின் அதிகாரத்தை பயன்படுத்தி மாணவர்கள் குறைந்தபட்சம் இரண்டு ஆண்டுகளாவது தமிழ்நாடு மருத்துவமனைகளில் பணிபுரிய வேண்டும் என்ற நிபந்தனை கொண்டுவரப்பட்டதாக தமிழ்நாடு அரசு தரப்பில் வாதிட்டப்பட்டது.

இருதரப்பு வாதங்களை கேட்ட நீதிபதிகள், தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளனர். தமிழ்நாடு மருத்துவமனைகளில் முதுகலை மருத்துவப்படிப்பு படிக்கும் அகில இந்திய ஒதுக்கீட்டில் பயிலும் வெளிமாநில மாணவர்கள் கட்டாயம் இரண்டு ஆண்டுகள் அரசு மருத்துவமனைகளில் பணிபுரிய வேண்டும். பணிபுரிந்த பின்பே சான்றிதழ் வழங்கப்படும் என்ற நிபந்தனை செல்லும் என்றும் தீர்ப்பளித்துள்ளனர்.

அதே வேளையில் இரண்டு ஆண்டுகளுக்குள் அவர்களுக்கு மாநில அரசு பணி வழங்க முடியவில்லை என்றாலும், சம்பந்தப்பட்ட மாணவ- மாணவிகளுக்கு சான்றிதழ் வழங்கலாம் என்றும் நீதிபதிகள் தங்களது உத்தரவில் குறிப்பிட்டுள்ளனர்.

இதையும் படிங்க: கோவிட்-19 நோயாளிகளின் வீடுகளில் தகரம் அடிக்கப்படுவது ஏன்? - சென்னை மாநகராட்சிக்கு உயர் நீதிமன்றம் கேள்வி

Last Updated : Oct 6, 2020, 2:06 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.