ETV Bharat / state

டெல்லியிலிருந்து 2,160 கிலோ எடை கொண்ட மருத்துவ உபகரணங்கள் சென்னை வருகை! - chennai airport

சென்னை: டெல்லியில் இருந்து வென்டிலேட்டா் உள்ளிட்ட 2,160 கிலோ மருத்துவ உபகரணங்கள் சென்னை விமான நிலையம் வந்தடைந்தன.

2,160 கிலோ எடை கொண்ட மருத்துவ உபகரணங்கள்

author img

By

Published : May 23, 2021, 1:48 PM IST

கரோனா வைரஸ் பரவலைத் தடுக்க, தமிழ்நாடு அரசு போா்க்கால அடிப்படையில் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. முழு ஊரடங்கு உட்பட பல்வேறு கட்டுப்பாடுகளை அரசு அறிவித்துள்ளது.

இருப்பினும், ஆக்ஸிஜன் தட்டுப்பாடு பெரும் பிரச்னையாக உள்ளது. எனவே, ஆக்ஸிஜன் உற்பத்தியை அதிகரிப்பதிலும், வெளிநாடுகள், வெளிமாநிலங்களில் இருந்து ஆக்ஸிஜனை தமிழ்நாட்டில் கொண்டு வருவதற்கும், தமிழ்நாடு முதலமைச்சா் மு.க.ஸ்டாலின் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறாா்.

தனியாா் நிறுவனங்கள், மருத்துவமனைகள், தொண்டு நிறுவனங்கள் ஆக்ஸிஜன் உற்பத்தி செய்யும் கருவிகளை பெருமளவு வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்கின்றன. இதற்கு அரசும் அதற்கு அனுமதி அளித்துள்ளது.

சென்னை விமான நிலையத்தில், வெளிநாடுகள், வெளி மாநிலங்களிலிருந்து விமானங்களில் வரும் மருத்துவம் சம்பந்தப்பட்ட கருவிகள், உபகரணங்கள், ஆக்ஸிஜன் உற்பத்தி செய்யும் கருவிகள் போன்றவைகள் வந்தால், அவைகளுக்கு முன்னுரிமை அளித்து சுங்கச் சோதனை, முகவரி சரிப்பாா்த்தல் ஆகியவற்றால் காலதாமதம் ஏற்படாமல் உடனடியாக டெலிவரி செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

மேலும் சுங்க அலுவலர்கள் கூடுதலாக நியமிக்கப்பட்டு, இரவு பகல் 24 மணி நேரமும், சென்னை விமான நிலையத்தில் இப்பணி தொடா்ந்து நடந்து வருகிறது. இந்நிலையில், நேற்றிரவு (மே.22) அமெரிக்கா, சீனா, ஹாங்காங்கிலிருந்து மூன்று சரக்கு விமானங்கள் சென்னை பழைய விமான நிலைய சரக்குப் பிரிவுக்கு வந்தன.

அந்த விமானங்களில் 58 ஆக்ஸிஜன் உற்பத்தி செய்யும் கருவிகள் வந்து இறங்கின. உடனடியாக, விமான நிலைய சுங்க அலுவலர்கள் காலதாமதம் இல்லாமல், இந்த 58 ஆக்ஸிஜன் தயாரிக்கும் கருவிகளுக்கு முன்னுரிமை அளித்து உடனடியாக வெளியே அனுப்பினா்.
அதைப்போல் டெல்லியிலிருந்து இந்திய விமானப் படை விமானத்தில் 360 பாா்சல்களில் 2,160 கிலோ எடையில் ஆக்ஸிஜன் உற்பத்தி செய்யும் கருவிகள், கரோனா வைரஸ் பரிசோதனைக்கான கிட்ஸ்கள், மருத்துவ உபகரணங்கள் சென்னை விமான நிலையத்தில் வந்து இறங்கின. சரிபார்ப்பு நடவடிக்கைகளை விரைவாக முடித்த விமான நிலைய அலுவலர்கள், அவற்றை தமிழ்நாடு அரசு அலுவலர்களிடம் ஒப்படைத்தனா்.

இதையும் படிங்க: காவலர்கள் சுழற்சி முறையில் பணியாற்ற டிஜிபி திரிபாதி உத்தரவு!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.