ETV Bharat / state

அரசுப் பள்ளி மாணவர்களில் 7.5 சதவீதம் இட ஒதுக்கீட்டிற்கு கலந்தாய்வு தொடங்கியது! - எம்பிபிஎஸ்

medical-counselling-begins-today-in-tamilnadu

author img

By

Published : Nov 18, 2020, 9:41 AM IST

Updated : Nov 18, 2020, 1:34 PM IST

09:36 November 18

அரசுப் பள்ளி மாணவர்களில் 7.5 சதவீதம் இட ஒதுக்கீட்டிற்கு கலந்தாய்வு தொடங்கியது

சென்னை: தமிழ்நாட்டில் முதல் முறையாக அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மருத்துவப் படிப்பில் இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ள நிலையில், அவர்களுக்கான கலந்தாய்வு இன்று தொடங்கியது.

மருத்துவப் படிப்பில் மாணவர்கள் சேர்வதற்கான தரவரிசைப் பட்டியலை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், கடந்த 16ஆம் தேதி  வெளியிட்டார். அதில், அரசு  பள்ளியில் படித்த மாணவர்களில் 7.5 சதவீத இட ஒதுக்கீட்டிற்கு 972 மாணவர்கள் விண்ணப்பித்தனர். அவர்களில் 951 மாணவர்களின் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளன. 7.5 சதவீத இட ஒதுக்கீட்டின் கீழ், அரசு பள்ளி மாணவர்களுக்கு எம்பிபிஎஸ் படிப்பில் 313 இடங்கள், பல் மருத்துவப் படிப்பில் 92 இடங்கள் என, ஒட்டுமொத்தமாக 405 இடங்கள் கிடைக்கும் என தெரிவித்தார்.

இந்த நிலையில்,  எம்பிபிஎஸ், பிடிஎஸ் மருத்துவப் படிப்பில் 7.5 சதவீதம் அரசு ஒதுக்கீட்டு இடங்களில் மாணவர்கள் சேர்வதற்கான கலந்தாய்வு இன்று(நவ.18) தொடங்கியது. இன்று  காலை 9 மணிக்கு தரவரிசைப் பட்டியலில் முதல் இடம் பெற்ற மாணவர்கள் முதல் 151 வது இடம் பிடித்த மாணவர்கள் வரையில் கட்ஆப் மதிப்பெண் 249 வரை அழைக்கப்பட்டனர். அதனைத் தொடர்ந்து, 11 மணிக்கு தரவரிசைப் பட்டியில் 152 ஆவது இடம் முதல் 267 ஆவது இடம் பிடித்த 190 கட் ஆப் மதிப்பெண்கள் பெற்ற மாணவர்கள் அழைக்கப்பட்டனர்.

நாளை(நவ.19) காலை 9 மணிக்கு தரவரிசைப் பட்டியலில் முதல் இடம் பெற்ற மாணவர்கள் 268  முதல்  423 ஆவது  இடம் பிடித்த மாணவர்கள் வரையில், கட்-ஆப் மதிப்பெண் 158  வரையில் அழைக்கப்பட்டுள்ளனர். அதனைத் தொடர்ந்து, 11 மணிக்கு தரவரிசைப் பட்டியில் 527 ஆவது இடம் முதல் 633 ஆவது இடம் பிடித்த 133  கட் ஆப் மதிப்பெண்கள் பெற்ற மாணவர்கள் அழைக்கப்பட்டுள்ளனர்.

நாளை மறு நாள்(நவ.20) காலை 9 மணிக்கு தரவரிசைப் பட்டியலில் முதல் இடம் பெற்ற மாணவர்கள் 634 ஆவது இடம் முதல்  785 ஆவது இடம் பிடித்த மாணவர்கள் வரை கட்ஆப் மதிப்பெண் 122  வரை அழைக்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து 11 மணிக்கு தரவரிசைப் பட்டியில் 786 ஆவது இடம் முதல் 886 ஆவது இடம் பிடித்த 116  கட் ஆப் மதிப்பெண்கள் பெற்ற மாணவர்கள் அழைக்கப்பட்டுள்ளனர்.  

மதியம் 2 மணிக்கு தரவரிசைப்பட்டியலில் 887ஆவது இடம் முதல் 951ஆவது இடம் பிடித்த மாணவர்கள் 113 மதிப்பெண் வரையிலும் அழைக்கப்பட்டுள்ளனர். மருத்துவப் படிப்பிற்கான கலந்தாய்வு சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெறுகிறது. கலந்தாய்வுக்கு வந்த அனைத்து மாணவர்களுக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதனைத் தொடர்ந்து, மாணவர் மற்றும் அவரின் பெற்றோர் ஒருவர் கலந்தாய்வு அறைக்குள் அனுமதிக்கப்பட்டனர்.

அங்குத் தரவரிசைப் பட்டியல் அடிப்படையில் கலந்தாய்விற்கு அழைக்கப்பட்ட மாணவர்களின் சான்றிதழ்கள் அனைத்தும் பள்ளிக் கல்வித்துறை, மருத்துவக் கல்வித் துறை அதிகாரிகளால் ஆய்வு செய்யப்பட்டன.

நீட் தேர்வு 2020 ஹால் டிக்கெட் மற்றும் மதிப்பெண் சான்றிதழ், 10ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ், 11 ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ், 12ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ், 6ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரையில் அரசுப் பள்ளியில் படித்தற்கான மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலரிடம் பெற்ற சான்றிதழ், கடைசியாக படித்தப் பள்ளியின் மாற்று சான்றிதழ் அல்லது தற்பொழுது படிக்கும் கல்வி நிறுவனத்தின் உண்மை சான்றிதழ், இருப்பிட சான்றிதழ், சாதிச் சான்றிதழ், முதல் தலைமுறை பட்டதாரி சான்றிதழ், வருமான சான்றிதழ் போன்றவை ஆய்வு  செய்யப்பட்ட பின்னர், கலந்தாய்வில் மாணவர்கள் தங்களுக்கு உரிய இடங்களை தெரிவு செய்துள்ளனர். இவர்களுக்கான ஒதுக்கீட்டு ஆணையை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று(நவ.18) மாலை வழங்குகிறார்.  

Last Updated : Nov 18, 2020, 1:34 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.