ETV Bharat / state

முதலமைச்சரை நேரில் சந்தித்த மருத்துவக் கல்லூரி மாணவர்கள்!

சென்னை: சிதம்பரம் - ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மாணவ, மாணவிகள் சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் பழனிசாமியை சந்தித்து நன்றி தெரிவித்தனர்.

cm palanisamy
cm palanisamy
author img

By

Published : Feb 8, 2021, 4:07 PM IST

கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் உள்ள ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மாணவர்கள், மற்ற அரசு மருத்துவக் கல்லூரிகளில் வசூலிக்கும் கல்விக் கட்டணத்தையே இக்கல்லூரியிலும் நிர்ணயிக்க வேண்டும் என வலியுறுத்தி தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.

மாணவர்களின் போராட்டத்துக்குப் பல்வேறு மாணவர் அமைப்புகளும், அரசியல் கட்சித் தலைவர்களும் ஆதரவு தெரிவித்தனர். 58 நாட்களாக மாணவர்கள் போராட்டம் நடத்தி வந்த நிலையில், தமிழ்நாடு அரசின் உயர் கல்வித்துறைக்கு கீழ் வரும் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரியை சுகாதாரத்துறைக்கு கீழ் கொண்டு வந்து தமிழ்நாடு அரசு அறிவிப்பு வெளியிட்டது.

தொடர்ந்து சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரியில், மருத்துவப் படிப்புகளுக்கான கட்டணத்தை நிர்ணயித்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டது. இதனைத் தொடர்ந்து மாணவர்கள் தங்களின் போராட்டத்தை வாபஸ் பெற்றனர்.

இந்நிலையில், ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மாணவ, மாணவிகள் சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் பழனிசாமியை சந்தித்து நன்றி தெரிவித்தனர்.

இதையும் படிங்க: சசிகலாவை வரவேற்க பட்டாசுகள் கொண்டு வந்த காரில் தீ விபத்து

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.