ETV Bharat / state

50 ஆயிரத்து 44 மருத்துவ முகாம்கள் நடைபெற்றுள்ளன - சென்னை மாநகராட்சி அறிவிப்பு - Chennai district News

சென்னை: மே 8 ஆம் தேதி முதல் நேற்று (செப்.21) வரை 50 ஆயிரத்து 44 மருத்துவ முகாம்கள் நடைபெற்று உள்ளன என மாநகராட்சி தெரிவித்துள்ளது.

medical Camp in Chennai
medical Camp in Chennai
author img

By

Published : Sep 22, 2020, 5:13 AM IST

தமிழ்நாட்டில் கரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. குறிப்பாக சென்னையில் கரோனா வைரஸ் அதிதீவிரமாக உள்ளது. சென்னையில் மட்டும் தினந்தோறும் கிட்டத்தட்ட ஆயிரம் பேர் இந்த வைரஸ் தொற்றினால் பாதிக்கப்படுகின்றனர்.

இந்தப் பரவலைத் தடுக்க சுகாதாரத் துறையும் மாநகராட்சியும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது. இருப்பினும் நோய்த்தொற்று குறையாமல் குறிப்பிட்ட பகுதிகளான தண்டையார்பேட்டை, கோடம்பாக்கம் போன்ற இடங்களில் அதிகரித்த வண்ணம் உள்ளது.

இந்தப் பரவலைத் தடுக்கும் ஒரு பகுதியாக சென்னையில் உள்ள 15 மண்டலங்களிலும் தினமும் மாநகராட்சி, சுகாதாரத்துறை சார்பாக மருத்துவ முகாம்கள் நடைபெற்று வருகின்றன.

அதன்படி நேற்று (செப்.21) 449 மருத்துவ முகாம்கள் நடைபெற்றன. இதில் அதிகபட்சமாக தண்டையார்பேட்டை, தேனாம்பேட்டையில் 47 மருத்துவ முகாம்கள் நடைபெற்றன.

நேற்று நடைபெற்ற 449 மருத்துவ முகாம்களில் 21 ஆயிரத்து 501 நபர்களுக்கு பரிசோதிக்கப்பட்டது. அதில், 1,224 நபர்கள் சிறு அறிகுறி இருந்ததால் அருகிலுள்ள கரோனா பரிசோதனை மையத்துக்கு அழைத்துச் சென்றனர். மே 8ஆம் தேதி முதல் நேற்று (செப்.21) வரை 50 ஆயிரத்து 44 மருத்துவ முகாம்கள் நடைபெற்று உள்ளன. அதில் 2 கோடியே 59 லட்சத்து 1987 நபர்கள் பரிசோதிக்கப்பட்டு உள்ளனர்.

தினமும் நடைபெறும் மருத்துவ முகாமினை அமைச்சர்கள், சுகாதாரத்துறை செயலர், மாநகராட்சி ஆணையர் ஆகியோர் நேரில் சென்று ஆய்வு செய்து வருகின்றனர்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.