சென்னை: கரோனா தொற்று பேரிடர் காலத்தில் பல்வேறு துறைகளில் சிறப்பாக பணியாற்றிய முன்களப் பணியாளர்கள் 27 பேருக்கு பதக்கம் மற்றும் சான்றிதழ் வழங்கப்படும் என தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
கரோனா தொற்று பேரிடர் காலத்தில் பல்வேறு துறைகளில் முன்களப் பணியாளர்களாக, சிறப்பாக பணியாற்றிய நபர்களுக்கு பதக்கம் மற்றும் சான்றிதழ் வழங்க தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
அதில், ‘மருத்துவர் ராஜேந்திரன்(சென்னை அரசு ராஜீவ் காந்தி பொது மருத்துவமனை), மருத்துவர் உமா மகேஸ்வரி (விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை), மருத்துவர் ஆ.சதீஷ் குமார் (சென்னை அரசினர் சித்த மருத்துவ கல்லூரி), செவிலியர் என். ராமுதாய் (அரசு ஓமந்தூரார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை), செவிலியர் கிரேஸ் எமைமா (அரசு ராஜீவ் காந்தி பொது மருத்துவமனை), செவிலியர் கண்காணிப்பாளர் ஆதிலட்சுமி (கோவை ஈ.எஸ்.ஐ. மருத்துவக் கல்லூரி மருத்துவமனை), எஸ். ராஜூ (மாநில சுகாதார ஆய்வகம்), முத்துக்குமார் (கோவை சுகாதார ஆய்வாளர்), ஜீவராஜ் (திண்டுக்கல் மாவட்ட ஆய்வக நுட்டநர்).
எஸ். சையித் அப்தாகீர் (மணப்பாறை காவலர்), டி.நரசிம்மஜோதி (விழுப்புரம் காவல் உதவி ஆய்வாளர்), இ .ராஜேஸ்வரி (சென்னை பெருநகர மகளிர் காவல் ஆய்வாளர்), ஐ . துரை ராபின் (கன்னியாகுமரி தீயணைப்பு வீரர்), ச.பழனிசாமி (பெரம்பலூர் தீயணைப்பு வீரர்), எஸ்.கருணாநிதி (சென்னை தீயணைப்பு வீரர்), எஸ்.ரகுபதி (மாமல்லபுரம் துப்புரவு ஆய்வாளர்), பி.பாண்டிச்செல்வம் (கொடைக்காணல் துப்புரவு ஆய்வாளர்), எஸ்.கலையரசன், (சென்னை உதவி பொறியாளர்), எம்.ஏசுதாஸ் (திருவள்ளூர் தூய்மைப் பணியாளர்), ஜெய்சங்கர் (சென்னை தூய்மைப் பணியாளர்), மா.சங்கர் (ஈரோடு தூய்மைப் பணியாளர்).
எஸ்.ஜெயச்சித்ரா (குன்றத்தூர் வட்டாச்சியர்), கே.ஜெயந்தி (மேட்டூர் மண்டல துணை வட்டாச்சியர்), து. பிரித்விராஜ் (விருதுநகர் கிராம நிர்வாக அலுவலர்), தியாகமூர்த்தி (சென்னை பட்டியல் எழுத்தர்), பி.ரமாமணி (காஞ்சிபுரம் நுகர்வோர் கூட்டுறவு விற்பனையாளர்), தமிழ்செல்வன் (காஞ்சிபுரம் நுகர்வோர் கூட்டுறவு விற்பனையாளர்) ஆகியோருக்கு தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பதக்கம் மற்றும் சான்றிதழ்களை வழங்குவார்.
மேலும் விருது பெறும் அனைவருக்கும் தலா ரூ. 10,000 மதிப்புள்ள தங்க முலாம் பூசிய பதக்கம் மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கவும் ஆணையிடப்படுகிறது’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: 'கல்லூரி இறுதி செமஸ்டர் தேர்வை ரத்து செய்ய வேண்டும்' - ஸ்டாலின்