டெல்லியிலிருந்து சென்னைக்கு வந்து கொண்டிருந்த ஏர் ஏசியா விமானத்தில் 107 பயணிகள், ஐந்து ஊழியர்கள் என மொத்தம் 112 பேருடன் நடுவானில் விமானம் பறந்து கொண்டிருந்தது.
அப்போது, எதிர்பாராத விதமாக விமானத்தில் இயந்திரக் கோளாறு ஏற்பட்டுள்ளது. இதை அறிந்த விமானி சமயோசிதமாக செயல்பட்டு, சென்னை விமானக் கட்டுப்பாட்டு அறைக்குத் தகவல் தெரிவித்தார். இதையடுத்து தொடர்ச்சியாக விமானத்தை சென்னையில், தரையிறக்க தொடர் ஏற்பாடுகள் துரிதமாக செயல்படுத்தப்பட்டன. பின், விமான தொழில்நுட்ப வல்லுநர்களின் தொடர் ஆலோசனையின்படி செயல்பட்ட விமானி, பத்திரமாக விமானத்தை சென்னை விமான நிலையத்தில் தரையிறக்கினார்.
இதனால் விமானத்தில் பயணித்த 107 பயணிகள், ஐந்து விமான ஊழியா்கள் உட்பட 112 போ் நல்வாய்ப்பாக உயிா் தப்பினா்.
இதையும் படிங்க:
அஜித்துக்கும் வலை விரிக்கிறதா பாஜக? - புகழ்ந்து தள்ளும் எஸ்.வி.சேகர்