சென்னை கோவைக்கு இணையாக மதுரை, தூத்துக்குடி தொழில் வழிச்சாலையை மேம்படுத்த தொழில் துறை திட்டமிட்டுள்ளது. மதுரை, தூத்துக்குடி, விருதுநகர், சிவகங்கை போன்ற தென் மாவட்டங்களில் தொழிற்சாலைகள், தகவல் தொழில்நுட்ப பூங்காக்கள் போன்றவற்றை கொண்டுவர தொழில் துறை திட்டமிட்டுள்ளது.
இதற்காக மதுரையை மையமாகக் கொண்டு தொழில் சார்ந்த வல்லுநர்கள், நிறுவனங்களை உள்ளடக்கிய மன்றமான போரம் (Forum) அமைத்து தொழில் சாத்தியக்கூறுகள் தொடர்பாக தொடர்ந்து விவாதித்து தொழிற்கொள்கை உருவாக்கவும் திட்டமிட்டுவருவதாகக் கூறப்படுகிறது.
மேலும் சென்னையில் அதிக முதலீட்டில் தொழில் தொடங்க அளிக்கப்படும் அதே சலுகைகளை தென்னக பகுதிகளில் குறைந்த முதலீட்டில் தொழில் தொடங்கினாலும் நிறுவனங்களுக்கும் சலுகைகள் வழங்கப்படவுள்ளது.
கடந்த இரண்டு உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் போடப்பட்ட ஒப்பந்தங்கள் தொடர்பாக தொடர்ச்சியாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டுவருகிறது. ஜூலை 15ஆம் தேதிக்குப் பிறகு புதிய தொழில் முதலீட்டாளர்களை தமிழ்நாட்டில் தொழில் முதலீடுகளை மேற்கொள்ள அழைப்புவிடுக்கப்படும்" எனத் தெரிவித்தார்.