ETV Bharat / state

அத்திவரதர் தரிசனத்திற்கு உரிய முன்னேற்பாடுகள் ஏன் செய்யவில்லை-வைகோ கேள்வி!

சென்னை: அத்திவரதரை தரிசனம் செய்ய லட்ச கணக்கில் மக்கள் வருகை இருக்கும் என அறிந்து முன்னேற்பாடு நடவடிக்கைகள் ஏன் செய்யவில்லை என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கேள்வி எழுப்பியுள்ளார்.

author img

By

Published : Jul 20, 2019, 9:56 PM IST

vaiko

சென்னையில் உள்ள மதிமுக தலைமை அலுவலகமான தாயகத்தில் மதிமுக உயர்நிலைக் குழு, ஆட்சிமன்றக் குழு, மாவட்ட செயலாளர்கள் கூட்டம் இன்று நடைபெற்றது.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் வைகோ பேசுகையில், ”அண்ணா பிறந்தநாள் அன்று சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் மதிமுக மாநாடு துணை பொதுச்செயலாளர் மல்லை சத்தியா தலைமையில் நடைபெற உள்ளது. இதில் பங்கேற்க திமுக தலைவர் ஸ்டாலின், திராவிடர் கழகத் தலைவர் வீரமணி உள்ளிட்டோரை அழைக்க உள்ளோம். லட்சக் கணக்கில் மக்கள் அத்திவரதரை தரிசனம் செய்ய வருவார்கள் என்பதை தெரிந்து முன்னேற்பாடுகள் செய்திருந்தால் ஒன்பது உயிர் பலியாகி இருக்காது. ஏன் அரசு நிர்வாகம் செயிலிழந்து விட்டதா? வேலூர் தொகுதியில் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் ஒரு லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார்.

என்.ஐ.ஏ. மசோதாவுக்கு திமுக ஆதரவு அளித்துள்ள நிலையில், இதற்கு மதிமுக ஒருபோதும் ஆதரவு வழங்காது. திமுக ஆதரவு வழங்கியுள்ளது குறித்து கருத்து கூற விரும்பவில்லை. முன்னாள் டெல்லி முதலமைச்சர் ஷீலா தீட்சித் மரணத்திற்கு ஆழந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.

வைகோ செய்தியாளர்கள் சந்திப்பு

Intro:

Body:Visual

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.