ETV Bharat / state

மதுரையில் ஏழு வயது சிறுவன் படுகொலை.. நெஞ்சை பதற வைக்கும் சம்பவம் - madurai boy murder - MADURAI BOY MURDER

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே மது போதை ஆசாமி வீடு புகுந்து கத்தியால் குத்தியதில் ஏழு வயது சிறுவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

கோப்புப்படம்
கோப்புப்படம் (credit - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 4, 2024, 5:25 PM IST

சோழவந்தான்: மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே உள்ளது திருவேடகம். இங்குள்ள காளியம்மன் கோவில் தெருவில் வசித்து வருபவர் ஆறுமுகம் மகன் அய்யனார் (40). இவர் அதே பகுதியைச் சேர்ந்த முத்துசாமி மற்றும் அவரது மனைவி தவமணி, பேரன் சிறுவன் மிதுன் (7) ஆகியோரை வீடு புகுந்து மது போதையில் கத்தியால் சரமாரியாக குத்தியுள்ளார்.

இந்த தாக்குதலால் படுகாயம் அடைந்த முத்துசாமி, தவமணி மற்றும் சிறுவன் மிதுன் ஆகியோர் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டனர். இதில் பலத்த காயம் அடைந்த சிறுவன் மிதுன் இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இதையும் படிங்க: திமுக பிரமுகர் கொலைக்கு பழிக்கு பழி.. திண்டுக்கல் துப்பாக்கி சூட்டில் அதிரும் பின்னணி

சோழவந்தான் பகுதியில் நேற்று இரவு வெவ்வேறு இடங்களில் நடைபெற்ற கத்திக்குத்து மற்றும் தாக்குதல் சம்பவங்களில் மேலக்காலைச் சேர்ந்த கட்டட தொழிலாளி சதீஷ் உயிரிழந்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து திருவேடகம் கிராமத்தைச் சேர்ந்த சிறுவன் மிதுன் இன்று அதிகாலை மருத்துவமனையில் உயிர் இழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து சோழவந்தான் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ் சேனல் மூலம் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே க்ளிக் செய்யவும்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.