சென்னை: நவராத்திரி மற்றும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கூட்ட நெரிசலை சமாளிப்பதற்காக தாம்பரத்தில் இருந்து திருச்சி, மதுரை, ராஜபாளையம், கொல்லம் வழியாக திருவனந்தபுரம் கொச்சுவேலிக்கு சிறப்பு ரயில் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பில், "தாம்பரம் - கொச்சுவேலி சிறப்பு ரயில் (06035) அக்டோபர் 11, 18, 25, நவம்பர் 1, 8, 15, 22, 29, டிசம்பர் 6, 13, 20, 27ஆகிய வெள்ளிக்கிழமைகளில் தாம்பரத்திலிருந்து இரவு 07:30 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 11.20 மணிக்கு கொச்சுவேலி சென்று சேரும்.
Special Trains between Tambaram and Kochuveli!!!
— Southern Railway (@GMSRailway) October 4, 2024
Special trains will be operated to clear extra rush of passengers during Puja /Diwali Festivals.#SouthernRailway pic.twitter.com/ZyNIbWANn6
மறு மார்க்கத்தில் கொச்சுவேலி - தாம்பரம் சிறப்பு ரயில் (06036) அக்டோபர் 13, 20, 27, நவம்பர் 3, 10, 17, 24, டிசம்பர் 1, 8, 15, 22, 29 ஆகிய ஞாயிற்றுக்கிழமைகளில் கொச்சுவேலியில் இருந்து மாலை 03:25 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 07:35 மணிக்கு தாம்பரம் சென்று சேரும் எனக் கூறப்பட்டுள்ளது.
இந்த சிறப்பு ரயில்கள், செங்கல்பட்டு, மேல்மருவத்தூர், விழுப்புரம், விருத்தாச்சலம், அரியலூர், ஸ்ரீ ரங்கம், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சிவகாசி, ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம், சங்கரன்கோவில், பாம்பகோயில் சந்தை, கடையநல்லூர், தென்காசி, செங்கோட்டை, தென்மலை, புனலூர், அவனீஸ்வரம், கொட்டாரக்கரா, குன்டரா, கொல்லம் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.
இந்த ரயில்களில் 14 குறைந்த கட்டண குளிர்சாதன மூன்றடுக்கு படுக்கை வசதி பெட்டிகள், 2 சரக்கு பெட்டியுடன் கூடிய மின்சார ஜெனரேட்டர் பெட்டிகள் ஆகியவை இணைக்கப்படும். இந்த ரயில்களுக்கான பயணச்சீட்டு முன்பதிவு தற்போது நடைபெற்று வருகிறது" என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ்அப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்