ETV Bharat / state

அண்ணா அறிவாலயத்தில் ஸ்டாலினுடன் வைகோ சந்திப்பு! - Vaiko meets Stalin at Anna arivalayam

சென்னை: மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் ஸ்டாலினை சந்தித்து ஆலோசனை நடத்தினார்.

vaiko press meet
vaiko press meet
author img

By

Published : Dec 14, 2019, 10:13 PM IST

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, திமுக தலைவர் ஸ்டாலினை சென்னை அண்ணா அறிவாலயத்தில் சந்தித்துச் பேசினார். இந்தச் சந்திப்புக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய வைகோ, "திமுக தலைவர் ஸ்டாலினுடன் உள்ளாட்சித் தேர்தல் பற்றி ஒருசில தகவல்களைப் பகிர்ந்துகொண்டோம்.

அறிவாலயத்தில் வைகோ
தற்போது வடகிழக்கு மாகாணங்கள் தீப்பற்றி எரிகின்றன. டெல்லியிலும் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது. இஸ்லாமியர்கள் என்றாலே இங்கு உள்ளே வருவது பாவச்செயல் என்ற அடிப்படையில் அணுகிவருகின்றனர். காஷ்மீரின் சிறப்புத் தகுதியை நீக்கியது மத்திய அரசு.

இப்பொழுது இஸ்லாமியர்கள் அல்லாதவர்கள் இங்கு வரலாம். ஆனால், அவர்களுக்கு குடியுரிமை கிடையாது என்பது மிக அநீதியானது. இதனால்தான் அந்த மசோதாவை வங்காள விரிகுடாவில் தூக்கி வீச வேண்டும் என்று மக்களவையில் பேசினேன்" என்று கூறினார்.

இதையும் படிங்க: பாலியல் குற்ற வழக்குகளில் ஆந்திராவை பின்பற்றவேண்டும் - ராமதாஸ்

Intro:Body:மதிமுக பொதுச்செயலாளர் வைகோ திமுக தலைவர் ஸ்டாலினை சென்னை அண்ணா அறிவாலயத்தில் சந்தித்து பேசினார்.

பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், உள்ளாட்சி தேர்தலில் பல குழப்பங்கள் செய்து இறுதியில் நேரடி தேர்தலை மறைமுக தேர்தல் என்றும், பிறகு புதிதாக மாவட்டங்கள் பிரித்து அந்த மாவட்டங்களில் தற்போது தேர்தல் இல்லை என்றும், மற்ற மாவட்டங்களில் முறையாக நடக்குமா என்றால் 2011 மக்கள் தொகையின் அடிப்படையில் நடத்தவில்லை. இதுவே ஏமாற்று மோசமான வேலை என தெரிவித்தார். அதனால் தான் திமுக நீதிமன்றம் அவமதிப்பு வழக்கு தொடரும் முடிவுக்கு வந்துள்ளது.

தொடர்ந்து அவர் பேசுகையில், திமுக தலைவர் ஸ்டாலின் உடன் உள்ளாட்சி தேர்தல் பற்றி ஓரிரு விஷயங்கள் பேசினோம்..

மேலும் தற்போது வட கிழக்கு மாகாணங்கள் தீ பற்றி எரிகின்றன. டெல்லியிலும் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது. இசுலாமியர்கள் என்றாலே இங்கு உள்ளே வருவது பாவ செயல் என்று அவர்கள் ஒவ்வொன்றாக அணுகி வருகின்றனர். காஷ்மீர் தனி அந்தஸ்து நீக்கினர், இப்பொழுது இசுலாமியர்கள் அல்லாதவர்கள் இங்கு வரலாம் என்றும் அவர்களுக்கு குடியுரிமை கிடையாது என்பது மிக அநீதியானது. இதனால் தான் அந்த மசோதாவை வங்காள விரிகுடாவில் தூக்கி வீச வேண்டும் என்று நாடாளுமன்றத்தில் பேசினேன் என தெரிவித்தார்..Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.