ETV Bharat / state

மகன் துரை வையாபுரிக்கு பதவி? - வைகோ சொன்ன பதில்

author img

By

Published : Oct 17, 2021, 2:26 PM IST

தனது மகன் துரை வையாபுரிக்கு கட்சியில் பதவி வழங்கவேண்டும் என சில மாவட்ட செயலாளர்கள் தீர்மானம் நிறைவேற்றிவுள்ளதாகவும், இதற்கான முடிவு அக்.20 ஆம் தேதி நடக்கும் மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் தெரிவிக்கப்படும் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்தார்.

வைகோ பேட்டி
வைகோ பேட்டி

சென்னை: மதுரையில் இருந்து விமானம் மூலம் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ இன்று (அக்.17) சென்னை வந்தார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஊரக உள்ளாட்சி தேர்தலில் வரலாறு காணாத வெற்றியை திமுக தலைமையிலான கூட்டணி பெற்றுள்ளது.

99% வெற்றியைப் பெற்றிருக்கிறது. இந்த வெற்றி திமுக தலைவர், முதலமைச்சர் ஸ்டாலினையே சாரும். இந்த தேர்தலில் மதிமுக கணிசமான வெற்றியைப் பெற்றிருக்கிறது.

உள்ளாட்சி தேர்தல் - புதிய உத்வேகம், புத்துணர்ச்சி

17 ஒன்றிய கவுன்சிலர், இரண்டு மாவட்ட கவுன்சிலர் பதவி, 87 ஊராட்சி மன்றங்களில் வென்றிருக்கிறோம். குருவிகுளம் ஊராட்சி ஒன்றியத்தில் மதிமுக மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ளது.

வைகோ பேட்டி

நடந்து முடிந்த தேர்தல் மதிமுகவிற்கும், தொண்டர்களுக்கும் புத்துணர்ச்சியை ஒரு புதிய உத்வேகத்தை, மாபெரும் எழுச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதிலிருந்து நாலுகால் பாய்ச்சலில் மதிமுக முன்னேறி செல்லும். இளைஞர்கள் இந்த மூன்று மாத காலத்தில் நிறைய பேர் மதிமுகவில் இணைந்திருக்கிறார்கள்.

மதிமுக உள்ளாட்சி தேர்தலின் முடிவில் ஒரு ஊக்க சக்தியாகவும், ஊக்குவிக்கும் சக்தியாகவும், திகழ்கின்றது. இந்த வெற்றி மகிழ்ச்சி அடைய செய்கிறது. இன்னும் வெற்றி பெறுவோம்.

அக்.20 ஆம் தேதி முடிவு தெரியும்

எதிர்கால திட்டங்கள் குறித்து ஆலோசிக்க வரும் அக்டோபர் 20 ஆம் தேதி மாவட்ட செயலாளர் கூட்டம் நடைபெறவுள்ளது. சில மாவட்டங்களில் துரை வையாபுரிக்கு பதவி வழங்க தீர்மானம் நிறைவேற்றியிருக்கிறார்கள் என்று கேட்டதற்கு, அக்டோபர் 20 ஆம் தேதி நடைபெறும் மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் கருத்து கேட்டு முடிவெடுக்கப்படும். துரை வையாபுரி அரசியலுக்கு வருவதை நான் விரும்பவில்லை. அதற்கான காரணத்தையும் அன்றைய தினம் கூறுகிறேன் என்று தெரிவித்தார்.

இதையும் படிங்க: பாஜக பிரமுகர் கல்யாணராமன் நள்ளிரவில் கைது

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.