ETV Bharat / state

ஒரு மாத மின் கட்டணத்தை தள்ளுபடி செய்ய வேண்டும் - வைகோ வலியுறுத்தல் - ஒரு மாத மின் கட்டணத்தை தள்ளுபடி செய்ய வேண்டும்

சென்னை : அனைத்துப் பிரிவினருக்கும் ஒரு மாத மின் கட்டணத்தை தள்ளுபடி செய்ய வேண்டும் என தமிழ்நாடு அரசுக்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார்.

vaiko
vaiko
author img

By

Published : Apr 13, 2020, 1:54 PM IST

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "ஊரடங்கு நீட்டித்திருக்கின்ற நிலையில், தற்போது எழுந்துள்ள பல பிரச்னைகளுக்கு, மத்திய மாநில அரசுகள் உடனடித் தீர்வு காண வேண்டும். கரோனாவால் பாதிக்கப்பட்ட பல நாடுகளில், தொழில்களை இயக்குவதற்கு அரசு பெருந்தொகையை நிதியுதவியாக அறிவித்துள்ளன. அதுபோல, தமிழ்நாட்டில், தொழில்கள் அனைத்தும் முடங்கி இருக்கின்றன. மின் கட்டணம் கட்ட இயலாத நிலை ஏற்பட்டுள்ளது.

அடுத்து வரும் நாட்களில் அன்றாட உணவுக்கும் உறுதி இல்லை. எனவே, தொழிற்சாலைகள், வீடுகள் அனைத்துப் பிரிவினருக்கும், ஒரு மாத மின் கட்டணத்தைத் தள்ளுபடி செய்ய வேண்டும். வளைகுடா நாடுகளில் 2 கோடிக்கும் கூடுதலான இந்தியத் தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றார்கள். அங்கே கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களை, மருத்துவமனைகளில் சேர்க்க இடம் இல்லை. எனவே, வீட்டிலேயே வைத்துப் பாருங்கள் என்று சொல்லி அனுப்பிவிடுகின்றார்கள்.

எனவே குவைத் நாட்டின் வேண்டுகோளை ஏற்று, மருத்துவர்கள் குழுவை, இந்திய அரசு அனுப்பி வைத்துள்ளது. அதுபோல, ஏனைய வளைகுடா நாடுகளுக்கும் மருத்துவர்கள் குழுவை அனுப்ப வேண்டும். நாட்டுப்புறக் கிராமியக் கலைஞர்கள், மேடை மெல்லிசைக் கலைஞர்கள் நல வாரியங்களில் சில ஆயிரம் பேர்களே பதிவு பெற்று இருக்கின்றார்கள்.

அந்த வாரியங்களின் சார்பில் வழங்கப்பட்ட உதவித்தொகை அவர்களுக்கு மட்டுமே கிடைத்திருக்கின்றது. ஆனால், லட்சக்கணக்கான கலைஞர்கள் பதிவுபெறாமல் இருக்கின்றார்கள். அவர்களுக்கும் உதவித்தொகை வழங்க வேண்டும்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க: தன்னார்வலர்கள் உதவி செய்ய தடை இல்லை - தமிழ்நாடு அரசு விளக்கம்!

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.