ETV Bharat / state

நீட்டைப் பற்றி தவறான பிம்பத்தை ஏற்படுத்தும் அண்ணாமலை - துரை வைகோ குற்றச்சாட்டு

நீட் தேர்வைப் பற்றி தவறான பிம்பத்தை அண்ணாமலை ஏற்படுத்திவருவதாக மதிமுகவின் தலைமை நிலையச் செயலாளர் துரை வைகோ குற்றஞ்சாட்டியுள்ளார்.

நீட் தேர்வைப் பற்றி தவறான பிம்பத்தை அண்ணாமலை எற்படுத்தி வருகிறார் -துரை வைகோ

author img

By

Published : Feb 8, 2022, 6:32 AM IST

சென்னை: பிற்படுத்தப்பட்டோர், இருளர் மக்களின் பிள்ளைகள் நீட் தேர்வால்தான் இன்று மருத்துவக் கல்லூரிக்குச் செல்கிறார்கள் என்ற பிம்பத்தை அண்ணாமலை ஏற்படுத்திவருவதாகக் குறிப்பிடுகிறார் துரை வைகோ.

அண்ணாமலை பொய் பரப்புரை

சென்னை எழும்பூரில் உள்ள மதிமுக தலைமை அலுவலகமான தாயகத்தில் துரை வைகோ செய்தியாளரைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், "அண்ணாமலை நீட் பற்றி பொய் பரப்புரை செய்துவருகிறார்.

அண்ணாமலை மாணவி லாவண்யா தற்கொலை பற்றியும், நீட் விவகாரம் பற்றியும் பேசுவது எல்லாம் முற்றிலும் தவறானது. நீட் சமூகநீதிக்கு ஆதரவானது, கிராமப்புற, ஏழை எளிய மக்களுக்கு எதிரானது அல்ல என்று தெரிவித்துவருகிறார். இதுவரை நீட் தேர்வால் 17 மாணவர்கள் இறந்துள்ளனர், அதில் 12 பேர் பெண் பிள்ளைகள்.

மாணவர்கள் தொடர்ந்து நீட் தேர்வு எழுதினாலும் தேர்வில் தேர்ச்சிபெற முடியாமல் அதிர்ச்சியில், விரக்தியில் தற்கொலை செய்துகொள்கின்றனர். பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், இருளர் மக்களின் பிள்ளைகள் நீட் தேர்வால்தான் இன்று மருத்துவக் கல்லூரிக்குச் செல்கின்றார்கள் என்ற பிம்பத்தை அண்ணாமலை ஏற்படுத்திவருகிறார்.

நீட் கோச்சிங் சென்டர்களுக்கு பாஜக ஆதரவு?

நீட் தேர்வில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 விழுக்காடு இட ஒதுக்கீட்டை கடந்த ஆட்சியின்போது கொண்டுவரப்பட்ட அப்போதைய உங்கள் ஆளுநர் ஒப்புதல் வழங்க கிட்டத்தட்ட ஒரு மாதத்துக்கு மேல் எடுத்துக்கொண்டார்.

அதற்குள் தற்போதைய முதலமைச்சர் ஸ்டாலின் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டார். அனைவருக்கும் எதிரானது நீட், இதை மறைக்க முடியாது. தமிழ்நாட்டைத் தவிர பாஜக ஆளுகின்ற எந்த மாநிலத்தில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான இட ஒதுக்கீடு இருக்கின்றது?

நீட்டுக்கு எதிரானவர்கள் தனியார் மருத்துவக் கல்லூரிக்கு ஆதரவாகச் செயல்படுகிறார்கள் என பாஜக தெரிவிக்கிறது, தற்போது நான் கேட்கிறேன் பாஜக நீட் கோச்சிங் சென்டர்களுக்கு ஆதரவாகச் செயல்படுகிறதா?

தமிழ் தேசியமும் ஒரு வகையில் வலதுசாரி அரசியலே

காங்கிரஸ் கட்சி, உச்ச நீதிமன்றத்தில் அழுத்தம் காரணமாகத்தான் மருத்துவக் கல்லூரிக்கு நுழைவுத் தேர்வை நடத்தலாம் என முன்னெடுத்தது. ஆனால் பாஜகதான் நீட் தேர்வை நடைமுறைப்படுத்தியது.

நீட் தேர்விலிருந்து விலக்கு பெறுவது பொதுமக்களின் விருப்பம் மாநில அரசின் உரிமை இதற்கு ஆளுநர் குடியரசுத் தலைவர் தடைவிதிக்கக் கூடாது. வலதுசாரி அரசியல் என்றாலே பொய் பரப்புரைதான், தமிழ் தேசியமும் ஒரு வகை வலதுசாரி அரசியல்தான். ஆளுநர் மாளிகை முற்றுகைப் போராட்டம் தேவைப்பட்டால் என் தலைமையில் நடைபெறும்" எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க:கல்வி நிறுவனங்களில் இட ஒதுக்கீட்டு விதிகளை சரிபார்க்க சமூக நீதிக் கண்காணிப்புக்குழு முடிவு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.