ETV Bharat / state

பாஜக என்ன குட்டிக்கரணம் போட்டாலும் தமிழகத்தில் வெற்றி பெற முடியாது: வைகோ விளாசல்! - மதிமுக பொதுச்செயலாளர் வைகோ

பாஜக என்ன குட்டிக்கரணம் போட்டாலும் வரும் நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் வெற்றி பெற முடியாது என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கருத்து தெரிவித்துள்ளார்.

மதிமுக  பொதுச்செயலாளர் வைகோ
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ
author img

By

Published : Jul 12, 2023, 10:50 PM IST

சென்னை: மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழக பொதுச்செயலாளர் வைகோ தலைமையில், அக்கட்சியின் நிர்வாகக்குழு கூட்டம் எழும்பூரில் உள்ள கட்சியின் தலைமையகத்தில் நடைபெற்றது. அதனை தொடர்ந்து மதிமுகவின் பொதுச்செயலாளர் வைகோ செய்தியாளர்களை சந்திதார்.

அப்போது பேசிய அவர், "162 பேர் கொண்ட நிர்வாக குழு கூட்டத்தில், 142 பேர் கலந்து கொண்டனர். பயனுள்ள முறையில் விவாதங்கள் நடைபெற்றன. ஆளுநரை திரும்ப பெற வேண்டும் என்று குடியரசுத் தலைவருக்கு அனுப்பியுள்ள கையெழுத்து இயக்கத்தின் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த கையெழுத்து இயக்கத்தின் பொதுமக்கள் ஆர்வத்துடன் கையெழுத்துயிட்டு வருகின்றனர்.

தமிழக ஆளுநரை திரும்ப பெற வேண்டும் என்று பொதுமக்கள் கருதுவதாக குடியரசு தலைவருக்கு தெரியப்படுத்த வேண்டும் என்பதற்காக இந்த கையெழுத்து இயக்கம். ஜூலை 17,18 ஆகிய தேதிகளில் பெங்களூரில் எதிர்க்கட்சித் தலைவர்கள் கூட்டம் நடைபெற உள்ளது. ஆளுநருக்கு எதிராக நடைபெறும் கட்சித் தலைவர்கள் கூட்டத்திற்கு எனக்கு அழைப்பு வந்துள்ளது.

இந்த அரசு சிறுபான்மை மக்களின் உரிமைகளை பறிக்கும் வகையில் செயல்பட்டு வருகிறது. பொது சிவில் சட்டத்தை நியாயப்படுத்தி பிரதமர் மோடி பேசுகிறார். ஒரு நாட்டில் இரண்டு சட்டம் தேவை இல்லை. பொது சிவில் சட்டத்தை கொண்டு வர வேண்டும் என்ற நோக்கத்தில் மோடி இருக்கிறார். இது நாட்டுக்கே கேடாக முடியும்.

இந்த பொது சிவில் சட்டம் நாட்டின் பன்முகத் தன்மைக்கு எதிரானது. கர்நாடகா முதல்வர் சட்டமன்றத்தில் மேகதாது அணை கட்டுவதற்கு செயல்பாடுகள் நடைபெற்று வருவதாக கூறுகிறார். அது கண்டனத்துக்குரியது, சித்தராமய்யாவின் கருத்து உச்சநீதிமன்றத்திற்கு எதிராக உள்ளது.

ராகுல் காந்தியை பதவியில் இருந்து நீக்கியதும், தண்டனை வழங்கியதும் மோடியின் அரசின் பழிவாங்கும் நோக்கத்தில் செயல்பட்டு வருவது தெரிகிறது. மணிப்பூர் கலவரத்தில் அதிகமானோர் கொல்லப்பட்டுள்ளனர். அப்பகுதி முழுவதும் ரத்த கலரையாக உள்ளது. இந்த பாஜக அரசு இந்தியாவின் ஜனநாயகத்தை குழி தோண்டி புதைத்து வருகிறது

இந்தியாவின் வரலாற்றிலேயே இது போன்று ஆளுநர் யாரும் செயல்பட மாட்டார்கள். ஆனால் தமிழக ஆளுநர் சட்டத்திற்கு எதிராக செயல்படுகிறார். பாஜக என்ன குட்டிக்கரணம் போட்டாலும் தமிழகத்தில் வெற்றி பெற முடியாது. அவர்கள் யாருடன் கூட்டணி வைத்தாலும் வெற்றி பெற முடியாது.

தமிழ் நாட்டின் சூழ்நிலை அது தான். பாஜக அரசுக்கு எதிராக ஒரு மனப்பான்மை உருவாக்கத்தான் இந்த கூட்டங்களை நடத்துகிறோம். 2024 நாடாளுமன்றத் தேர்தலில் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. பொது குழு நடத்தியதில் 1401 பொதுக்குழு உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்கள்.

தேர்தலில் வைகோ போட்டியிட வாய்ப்பு இல்லை என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மனதில் தோன்றுவதெல்லாம் பேசுவார். பத்திரிக்கையாளர்களுக்கு ஒரு பிரியமான நபர் அவர். படிப்படியாக மதுவை குறைக்க வேண்டும். அதற்காகத்தான் நான் மூன்று நடை பயணம் மேற்கொண்டேன். மதுக்கடைகள் இருக்கக் கூடாது என்பது தான் எங்களுடைய கருத்து. மதுக்கடைகளில் விற்பனையை அதிகரிக்கப்படுவது ஏற்புடையதல்ல" என வைகோ கூறியுள்ளார்.

இதையும் படிங்க: "குடிக்க தண்ணீர் இல்லை" - கோவில்பட்டியில் கனிமொழி காரை வழிமறித்த பெண்கள்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.