ETV Bharat / state

எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்பிற்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கும் தேதி அறிவிப்பு

சென்னை: தமிழ்நாட்டில் உள்ள அரசு மற்றும் சுயநிதி மருத்துவக் கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்பில் மாணவர்கள் சேர ஜூன் 7ஆம் தேதி முதல் 20ஆம் தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என மருத்துவக் கல்வி மாணவர் சேர்க்கை செயலர் செல்வராஜன் தெரிவித்துள்ளார்.

stethoscope
author img

By

Published : Jun 7, 2019, 7:35 AM IST

மருத்துவம் மற்றும் பல் மருத்துவ படிப்பில் மாணவர்கள் சேர்வதற்கான நுழைவுத் தேர்வு முடிவுகள் கடந்த ஐந்தாம் தேதி வெளியிடப்பட்டது. அதனைத் தொடர்ந்து ஜூன் ஏழாம் தேதி முதல் 20ஆம் தேதி வரை எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ் படிப்பில் மாணவர்கள் சேர்வதற்கு www.tnhealth.org, www.tnmedicalselection.net ஆகிய இணையதளங்களில் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மருத்துவக்கல்வி மாணவர் சேர்க்கை செயலர் செல்வராஜன், "ஜூன் 21ஆம் தேதி மாலைக்குள் விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து மருத்துவக் கல்வி மாணவர் சேர்க்கைக்கு அனுப்பி வைக்க வேண்டும். அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு விண்ணப்பக் கட்டணமாக 500 ரூபாயும், தனியார் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கு விண்ணப்பக் கட்டணமாக 1000 ரூபாயும் செலுத்த வேண்டும்.

அவர்களுக்கான கலந்தாய்வு நேரடியாகவே நடத்தப்படும். ஜூலை 2ஆம் தேதி மருத்துவப் படிப்பிற்கான தரவரிசைப் பட்டியல் வெளியிடுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. ஜூலை முதல் வாரத்தில் முதல் கட்ட கலந்தாய்வு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் உள்ள 22 அரசு மருத்துவக் கல்லூரிகளில் 3000 எம்.பி.பி.எஸ்., இடங்களும் இந்த ஆண்டு புதியதாக திருநெல்வேலி, மதுரை மருத்துவக் கல்லூரிகளில் கூடுதலாக தலா 100 இடங்களும், கரூர் புதிய அரசு மருத்துவ கல்லூரிகளில் 150 இடங்களும், ஐ.ஆர்.டி. பெருந்துறை மருத்துவக் கல்லூரியை அரசு ஏற்றுக் கொள்வதால் அதில் 100 இடங்களும் கூடுதலாக மருத்துவ கலந்தாய்விற்கு கிடைக்கிறது.

அதேபோல் தமிழ்நாடு பல் மருத்துவக் கல்லூரியில் 100 இடங்களுக்கும் விண்ணப்பிக்கலாம்" என்றார்.

Intro:எம்பிபிஎஸ் பிடிஎஸ் படிப்பிற்கு
ஜூன் 7 ந் தேதி முதல் 20-ஆம் தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பம்

Body:சென்னை, தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் சுயநிதி மருத்துவக்கல்லூரிகளில் எம்பிபிஎஸ் பிடிஎஸ் படிப்பில் மாணவர்கள் சேருவதற்கு ஜூன் 7ம் தேதி முதல் 20 ந் தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என மருத்துவக்கல்வி மாணவர் சேர்க்கை செயலாளர் செல்வராஜன் தெரிவித்துள்ளார்.

மருத்துவம் மற்றும் பல் மருத்துவ படிப்பில் மாணவர்கள் சேர்வதற்கான நுழைவுத்தேர்வு முடிவுகள் ஜூன் மாதம் 5-ம் தேதி வெளியிடப்பட்டது. அதனைத் தொடர்ந்து ஜூன் 7 ம் தேதி முதல் 20 ந் தேதி வரை எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் படிப்பில் மாணவர்களைச் சேர்வதற்கு www.tnhealth.org, www.tnmedicalselection.net என்ற இணையதளத்தில் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
21 ந் தேதி வரை மாலைக்குள் விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து மருத்துவக்கல்வி மாணவர் சேர்க்கைக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு விண்ணப்பக் கட்டணமாக 500 ரூபாயும், தனியார் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கு விண்ணப்பக் கட்டணமாக ஆயிரம் ரூபாயும் செலுத்த வேண்டும்.

ஆனால் அவர்களுக்கான கலந்தாய்வு நேரடியாகவே நடத்தப்படும்.
ஜூலை 2 ந் தேதி மருத்துவப் படிப்பிற்கான தரவரிசைப் பட்டியல் வெளியீடு வதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. ஜூலை முதல் வாரத்தில் முதல் கட்ட கலந்தாய்வு நடத்த திட்டமிட்டுள்ளோம்.
தமிழகத்தில் உள்ள 22 அரசு மருத்துவக் கல்லூரிகளில் 3000 எம்பிபிஎஸ் இடங்களும், இந்த ஆண்டு புதியதாக திருநெல்வேலி, மதுரை மருத்துவக் கல்லூரிகளில் கூடுதலாக தலா 100 இடங்களும், கரூர் புதிய அரசு மருத்துவ கல்லூரிகளில் 150 இடங்கள், ஐ .ஆர். டி. பெருந்துறை மருத்துவக் கல்லூரி அரசு ஏற்றுக் கொள்வதால் அதில் 100 இடங்களும் கூடுதலாக மருத்துவ கலந்தாய்விற்கு கிடைக்கிறது.
அதேபோல் தமிழ்நாடு பல் மருத்துவக் கல்லூரியில் 100 இடங்களுக்கும் விண்ணப்பிக்கலாம் என அவர் தெரிவித்தார்.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.