ETV Bharat / state

குருவியாக வந்த எம்பிஏ பட்டதாரி.. கூண்டோடு சிக்கியது எப்படி? - Karaikudi Kuruvi caught in chennai

வேலை கிடைக்காததால், குருவியாக செயல்பட்டு கடத்தல்காரர்களால் சித்ரவதைக்கு உள்ளாக்கப்பட்ட எம்பிஏ பட்டதாரி உள்பட 4 பேரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

குருவியாக செயல்பட்ட எம்பிஏ பட்டதாரி.. கூண்டோடு சிக்கியது எப்படி?

author img

By

Published : May 12, 2023, 9:40 AM IST

சென்னை: காரைக்குடியைச் சேர்ந்த ஸ்ரீராம் என்பவரை தங்கம் கடத்தும் கும்பல் ஒன்று மண்ணடி பகுதியில் அடைத்து வைத்துள்ளதாகவும், அவரை மீட்க உதவுமாறும் புகைப்படம் மற்றும் செல்போன் எண்ணுடன் அவரது நண்பர் அசாருதீன் என்பவர் வாட்ஸ் அப் குழுக்களில் பகிர்ந்துள்ளார். இந்த தகவல் பூக்கடை துணை ஆணையர் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

இதனையடுத்து, உடனடியாக அசாருதீனை தொடர்பு கொண்டு முழு விவரத்தையும் பெற்ற காவல் துறையினர், ஸ்ரீராமின் செல்போன் சிக்னலை ஆய்வு செய்துள்ளனர். இதன் பேரில், பாரிமுனை உம்பர்சன் தெருவில் உள்ள தனியார் விடுதியில் இருப்பது போல சிக்னல் காண்பித்துள்ளது.

இதனையடுத்து விடுதியை சுற்றி வளைத்த 20க்கும் மேற்பட்ட காவல் துறையினர், மூன்றாவது தளத்தில் இருந்த ஒரு அறையில் அடைத்து வைக்கப்பட்டு இருந்த ஸ்ரீராமை மீட்டுள்ளனர். அது மட்டுமல்லாமல், காவலுக்கு நின்றிருந்த இருவரையும், கடைக்கு சென்றுவிட்டு திரும்பிய மேலும் ஒருவர் என 3 பேரை கைது செய்த காவல் துறையினர், அவர்களை காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை செய்துள்ளனர்.

இந்த விசாரணையில், மீட்கப்பட்ட நபர் காரைக்குடியைச் சேர்ந்த ஸ்ரீராம் என்பது தெரிய வந்துள்ளது. மேலும், எம்பிஏ பட்டதாரியான இவர், சரியான வேலை இன்றி இருந்துள்ளார். இந்த நிலையில், நண்பர்கள் மூலம் அறிமுகமான சென்னை தண்டையார்பேட்டையைச் சேர்ந்த அசார் என்பவரிடம் குருவியாக செயல்படத் தொடங்கி உள்ளார்.

அப்போது, அடிக்கடி பயணம் சென்று பொருட்களையும் கடத்தி வந்துள்ளார். இதற்கு 15 ஆயிரம் முதல் 25 ஆயிரம் ரூபாய் வரை பெற்றுள்ளார். அந்த வகையில், சமீபத்தில் மஸ்கட்டிற்கு சென்ற ஸ்ரீராம், கடந்த 6ஆம் தேதி இரவு மஸ்கட்டில் இருந்து 300 கிராம் தங்கத்தை எடுத்து வந்துள்ளார்.

அப்போது மும்பை விமான நிலையத்தில் இறங்கிய ஸ்ரீராம், சென்னைக்கு விமானம் மூலமாக செல்ல முற்பட்டபோது சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்துள்ளனர். இதனால் அங்கே இருந்த குப்பைத் தொட்டியில் தங்கத்தை போட்டுவிட்டு, சென்னை வந்துள்ளதாக கடத்தல் கும்பலின் தலைவனாக கருதப்படும் அசாரிடம் கூறி உள்ளார்.

இதனையடுத்து, சென்னை விமான நிலையத்தில் தங்கத்திற்காக காத்திருந்த அசார், வெளிநாட்டு முனையத்தில் உள்ள குப்பைத் தொட்டியில் தங்கத்தை போட்டதாக தெரிவித்ததால், மீண்டும் அங்கு செல்ல ஸ்ரீராமை அழைத்துக் கொண்டு விமானம் மூலமாக கொழும்பு சென்றுள்ளார். பின்னர், அங்கு இருந்து விமானம் மூலமாக மும்பை விமான நிலையம் சென்றுள்ளனர்.

தொடர்ந்து அங்கு குப்பைத் தொட்டியை பார்த்தபோது அதில் தங்கம் இல்லை. எனவே, சென்னைக்கு விமானம் மூலமாக வந்து, பிராட்வே பகுதியில் உள்ள உம்பர்சன் தெருவில் இருக்கும் தனியார் விடுதியில் ஸ்ரீராமை அடைத்து வைத்து சித்திரவதை செய்துள்ளனர். இதனையடுத்து கடந்த 7ஆம் தேதி முதல் 5 நாட்கள் ஸ்ரீராம் சித்ரவதைக்கு ஆளாக்கப்பட்டுள்ளார்.

முக்கியமாக, அவரது உடலில் சிகரெட்டுகளால் சூடுவைத்த காயங்களும் இருந்துள்ளது. மேலும், ஸ்ரீராமின் செல்போன் ஆஃப் செய்து வைக்கப்பட்டிருந்ததால், அவரது குடும்பத்தார் அவர்களது நண்பர்களிடம் கூறி உள்ளனர். இந்த நிலையில், திடீரென ஸ்ரீராமின் செல்போன் ஆன் செய்யப்படவே, அப்போது தொடர்பு கொண்ட அசாருதீன், ஸ்ரீராம் தயங்கி தயங்கி பேசுவதை வைத்து அவர் சிக்கலில் இருப்பதை அறிந்து கொண்டு வாட்சப் குழுக்களில் பகிர்ந்துள்ளார்.

இந்த தகவல் கிடைத்ததின் பேரில் செல்போன் எண்ணை ஆய்வு செய்து ஸ்ரீராம் தனியார் விடுதியில் அடைத்து வைக்கப்பட்டிருப்பது கண்டறிந்து, அவரை 1 மணி நேரத்திற்குள் காவல் துறையினர் மீட்டுள்ளனர் என்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது. இதனைத் தொடர்ந்து, ஸ்ரீராமை கடத்தி விடுதியில் அடைத்து வைத்து கொடுமைப்படுத்தியதாக தண்டையார்பேட்டையைச் சேர்ந்த முகமது ஹர்சத், திருவள்ளூரைச் சேர்ந்த நவீன் மற்றும் ஜெயராஜ் ஆகிய 3 பேரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

இவர்களில் முகமது ஹர்சத் என்பவர், கடத்தல் கும்பலின் தலைவராக கருதப்படும் அசாரின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், தலைமறைவாக உள்ள கடத்தல் தலைவர் ஆசார் என்பவரை எஸ்பிளேனேடு காவல் துறையினர் தேடி வருகின்றனர்.

இதையும் படிங்க: 20 ஆண்டுகளாக போதைப்பொருளை விற்பனை செய்து வந்த ஊராட்சி மன்றத் தலைவர்? - அதிர்ச்சி சம்பவம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.