ETV Bharat / state

சண்முக சுப்ரமணியன் கண்டுபிடித்தது லேண்டரின் பாகங்கள் தானா? - என்ன சொல்கிறார் மயில்சாமி அண்ணாதுரை!

சந்திரயான் 2 விண்கலத்தின் உடைந்த பாகங்கள் (விக்ரம் லேண்டர்) நிலவில் இருப்பதாக சென்னையைச் சேர்ந்த பொறியாளர் சண்முகம் சுப்பிரமணியன் கண்டுபிடித்துள்ளார். இதை அமெரிக்காவின் நாசாவும் உறுதி செய்துள்ளது. இது குறித்து இஸ்ரோ முன்னாள் இயக்குநர் டாக்டர் மயில்சாமி அண்ணாதுரை நமது ஈடிவி பாரத் தமிழ்நாடு செய்திகளுக்கு பிரத்யேக பேட்டி அளித்துள்ளார்.

mayilsamy annadurai speak about who found the vikaram lander

author img

By

Published : Dec 3, 2019, 10:40 PM IST

நாசா உறுதி செய்ததைப் போல அவை லேண்டரின் பாகங்கள் தானா?

''விண்வெளி ஆராய்ச்சி குறித்த விஷயங்களை நாசா வெளியிடும். அதை பொதுமக்கள், வான் ஆர்வலர்கள் எனப் பலரும் கவனித்து சில விஷயங்கள் வித்தியாசமாகவோ அல்லது புதிதாகவோ தென்பட்டால், அதைக் கண்டறிந்து நாசாவுக்கு தெரிவிப்பார்கள். பின்னர், நாசா அது குறித்து ஆராய்ந்து அது உண்மையாக இருக்கும் பட்சத்தில், கண்டுபிடித்தவர்களின் பெயரையே அதற்கு சூட்டுவார்கள்.

மயில்சாமி அண்ணாதுரை பேட்டி

இது அமெரிக்காவில் சாதாரணமாக நடக்கும் நிகழ்வு தான். இந்தியாவில் முதன்முறையாக, குறிப்பாக சென்னையைச் சேர்ந்த பொறியாளர் ஒருவர் சந்திரயான் 2 விண்கலத்தை கண்டுபிடித்துள்ளார். ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் எடுக்கப்பட்ட நிலவின் இரு புகைப்படங்களை ஒப்பிட்டு பார்த்து, அது லேண்டரின் பாகங்களாக இருக்கலாம் என்று நாசாவிடம் தெரிவித்துள்ளார். நாசா அறிஞர்கள் ஆராய்ந்து, அது லேண்டரின் பாகங்கள் தான் என்று முடிவெடுத்து, அதைக் கண்டுபிடித்த பொறியாளரைப் பாராட்டியுள்ளனர்.

மயில்சாமி அண்ணாதுரை பேட்டி

லேண்டரைக் கண்டுபிடிக்க இஸ்ரோவோ, நாசாவோ தவறிவிட்டது என்று எண்ணாமல், நமது ஊர் இளைஞர் கண்டுபிடித்துள்ளார் என்ற கோணத்தில் தான் நாம் பார்க்க வேண்டும். சண்முக சுப்ரமணியனின் இந்த முயற்சி பல இளைஞர்களை ஊக்குவிக்கும் என்றே சொல்ல வேண்டும். அவரின் முயற்சி வெற்றியடைந்துள்ளது எனக்கு மகிழ்ச்சியளிக்கிறது''

சந்திரயான் 2 விழுந்து நொறுங்கி விட்டதா? இது குறித்து இஸ்ரோ ஏன் எதுவும் தெரிவிக்கவில்லை?

சந்திரயான் 2 திட்டம் தோல்வியடைந்தது என்று நாடாளுமன்றத்திலேயே தெரிவிக்கப்பட்டது. லேண்டர் திட்டமிட்டதை விட, அதிக வேகத்தில் சென்று விழுந்துவிட்டதால், அதன் தொலைத்தொடர்பு துண்டிக்கப்பட்டது. ஆனால், ஆர்பிட்டர் இன்னும் அங்கு தான் இயங்கி கொண்டிருக்கிறது. தரையில் இறங்குவதற்கு முன்பான கடடைசி நேரம் வரையில் திட்டமிட்டப்படி சிறப்பாக தான் சென்றது.

மயில்சாமி அண்ணாதுரை பேட்டி

இது போன்ற தவறு உலகெங்கும் நடப்பது இயல்புதான். சந்திரயான் 2 திட்டத்தில் பெற்ற பயிற்சி, சந்திரயான் 3 திட்டத்திற்கு பெரும் உறுதுணையாக இருக்கும். அதேசமயம் நல்ல பாடமாகவும் இருக்கும்''

நாசா விண்வெளி ஆராய்ச்சி விஷயங்களை வெளிப்படையாக மக்களுக்குத் தெரிவிக்கிறது. தற்காலத்தில் விண்வெளி ஆராய்ச்சி குறித்து இந்திய மக்கள் ஆர்வமாகிவரும் நிலையில், இஸ்ரோ அவ்வாறு வெளிப்படையாகத் தெரிவிப்பதில்லை. ஆகையால் இஸ்ரோ கொள்கையில் ஏதேனும் மாற்றங்கள் தேவை என்று நினைக்கிறீர்களா?

''செயற்கைக்கோள் விண்ணில் ஏவிய பின், செயற்கைக்கோளை தயாரித்தவர்களுக்கு அங்கிருந்து பெறப்படும் தகவல் தெரிவிக்கப்படும். அதில் ஏதாவது முன்னேற்றங்கள் இருந்தால் மட்டுமே பொது மக்களுக்கு அறிவிக்கப்படும். இந்த உலகளாவிய நடைமுறையைத் தான் இஸ்ரோவும் பின்பற்றுகிறது. நாசா அனுப்பிய எல்ஆர்ஓ செயற்கைக்கோள் பல வருடங்களாக சிக்னல்களை அனுப்புவதால், ஒரு வார காலத்துக்குள் தகவல்கள் தெரிவிக்கப்படுகிறது.

மயில்சாமி அண்ணாதுரை பேட்டி

ஆனால், இதுபோன்று நமக்கு சிக்னல் கிடைப்பதற்கு 6 மாதம் முதல் 1 வருடம் அளவுக்கு காலம் ஆவதால், கால விரயம் ஆகிறது. சந்திரயான் 1, மங்கள்யான் அனுப்பிய தகவல்களை பொது மக்கள் அணுக முடிகிறது. இருப்பினும், சந்திரயான் 2 ஆர்பிட்டர் அனுப்பும் தகவல்கள் சற்று தாமதமாகவே கிடைக்கிறது. விரைவில் இந்தத் தகவலையும் பொதுமக்கள் காண இஸ்ரோ வழிவகை செய்யும் என்று நினைக்கிறேன். அதேபோல சந்திரயான் 1, மங்கள்யான் தரவுகளைப் பார்ப்பவர்கள் மிக மிக குறைவு. ஆனால், இதன் பிறகு இந்த தரவுகளை பொதுமக்கள் எளிதில் அணுகி, அதில் ஏதாவது கண்டுபிடிக்க முயற்சி செய்வார்கள். நாசா மாதிரியே இஸ்ரோவும் தரவுகளை பொது மக்களுக்கு வழங்கும் நாட்கள் விரைவில் வரும் என்று நினைக்கிறேன்''

தனியார்கள் கண்டுபிடிக்கும் படைப்புகளுக்கு இஸ்ரோ அங்கீகாரம் வழங்குமா?

'' சென்னை பொறியாளரின் முயற்சியின் மூலம், விண்வெளி ஆராய்ச்சி தரவுகளை பொதுமக்கள் எவ்வாறு அணுக முடியும் என்று அனைத்து மக்களுக்கும் தெரிய வந்திருக்கும். இதன் மூலம் புதிய கண்டுபிடிப்புகள் வெளியே வரும். நாசா போல இஸ்ரோவும் தனியார் முயற்சிக்கு அங்கீகாரம் அளிக்கும் என்று நம்புகிறேன். ஆரம்ப காலத்தில் செயற்கைக்கோள்களை இஸ்ரோ மட்டும் செய்து வந்தது.

மயில்சாமி அண்ணாதுரை பேட்டி

ஆனால், தற்போது தனியார் மட்டுமல்லாது, அரசுப் பள்ளி மாணவர்களும் செயற்கைக்கோள்களை செய்து வருகின்றனர். அதேபோல விண்வெளி ஆராய்ச்சி தரவுகளில் இருந்து புதிய கண்டுபிடிப்புகளுக்கு பலர் முன் வருவார்கள் என்று நம்புகிறேன்'' என்று கூறினார்.

இதையும் படிங்க:விக்ரம் லேண்டரைக் கண்டுபிடித்து உலகையே திரும்பிப் பார்க்க வைத்த தமிழன்!

Intro:Body:சென்னை //வி. டி. விஜய்// சிறப்பு பேட்டி

இஸ்ரோ விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை சிறப்பு பேட்டி

சந்திரயான் 2 உடைந்த பாகங்கள் நிலவில் இருப்பதாக சென்னையை சேர்ந்த பொறியாளர் சண்முகம் சுப்பிரமணியன் கண்டுபிடித்துள்ளார். இதை அமெரிக்காவின் நாசாவும் உறுதி செய்துள்ளது. இதுகுறித்து இஸ்ரோ மூத்த விஞ்ஞானி டாக்டர் மயில்சாமி அண்ணாதுரை இ டிவி பாரத் செய்திகளுக்கு பிரத்தியேக பேட்டி அளித்துள்ளார்.

நாசா உறுதி செய்ததை போலா அவை லேண்டரின் பாகங்கள் தானா?

விண்வெளி ஆராய்ச்சி குறித்த விஷயங்களை நாசா வெளியிடும். அதை பொதுமக்கள், வான் ஆர்வலர்கள் சில விஷயங்களை கண்டறிந்து நாசாவுவுக்கு தெரிவிப்பார்கள். அதை நாசா பரிசீலித்து கண்டுபிடித்தவர்கள் பெயரையே அதற்கு சூட்டுவார்கள். இது அமெரிக்காவில் நடக்கும் நிகழ்வு. அந்த வகையில் சென்னையை சேர்ந்த பொறியாளர் சந்திரயான் 2 குறித்து கண்டுபிடித்துள்ளார். ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை வைத்து ஒப்பிட்டு லேண்டரின் பாகங்களாக இருக்கலாம் என்று தெரிவித்துள்ளார். இதை நாசா அறிஞர்களிடம் ஒப்பிட்டு லேண்டரின் பாகங்கள் தான் என்று முடிவெடுத்து இதற்காக அந்த பொறியாளரை பாராட்டி உள்ளனர். இதை இஸ்ரோவோ, நாசாவோ தவறவிட்டது என்றில்லாமல் நமது ஊர் இளைஞர் அதை கண்டுபிடித்துள்ளார். சண்முக சுந்தரத்தின் இந்த முயற்சி பல இளைஞர்களை ஊக்குவிக்கும் என்றே சொல்ல வேண்டும்.

சந்திரயான் 2 விழுந்து நொறுங்கி விட்டதா? இதுகுறித்து இஸ்ரோ ஏன் தெரிவிக்கவில்லை?

சந்திரயான் 2 திட்டம் தோல்வி என்று நாடாளுமன்றத்திலேயே தெரிவிக்கப்பட்டது. லேண்டர் திட்டமிட்டதை விட அதிக வேகத்தில் சென்று விழுந்து விட்டது. அதனால் தான் தொலை தொடர்பு துண்டிக்கப்பட்டது. ஆனால் ஆர்பிட்டர் இன்னும் அங்கு தான் இயங்கி கொண்டிருக்கிறது. தரை இறங்கு கடடைசி நேரம் வரையில் திட்டமிட்டப்படி சிறப்பாக தான் நடந்தது. இது போன்ற தவறு நடப்பது இயல்புதான். இது சந்திரயான் 3 க்கு ஒரு நல்ல பாடம்.

நாசா விண்வெளி ஆராய்ச்சி விஷயங்களை வெளிப்படையாக தெரிவிக்கிறது. விண்வெளி ஆராய்ச்சி குறித்து பொதுமக்கள் ஆர்வமாகி வரும் நிலையில் இஸ்ரோ அப்படி தெரிவிப்பதில்லை. ஆகையால் இஸ்ரோ கொள்கையில் ஏதேனும் மாற்றங்கள் தேவை என்று நினைக்கிறீர்களா?

செயற்கைகோள் விண்ணில் ஏவியவுடன் செயற்கைக்கோளை தயாரித்தவர்களுக்கு அங்கிருந்து பெறப்படும் தகவல் தெரிவிக்கப்படும். அதில் எதாவது முன்னேற்றங்கள் இருந்தால் மட்டுமே பொதுமக்களுக்கு அறிவிக்கப்படும். உலகளாவிய இந்த நடைமுறையை தான் இஸ்ரோவும் பின்பற்றுகிறது. நாசா அனுப்பிய எல் ஆர் ஓ செயற்கைகோள் பல வருடங்களாக சிக்னல்களை அனுப்புவதால் ஒரு வார காலத்துக்குள் தகவல்கள் தெரிவிக்கப்படுகிறது. ஆனால் இது நமக்கு தெரிய வர 6 முதல் 1 வருடம் அளவுக்கு கால விரயம் ஆகிறது. சந்திரயான் 1, மங்கள்யான் அனுப்பிய தகவல்கள் பொதுமக்கள் அணுக முடிகிறது. சந்திரயான் 2 ஆர்பிட்டர் அனுப்பும் தகவல்கள் சற்று தாமதமாகவே கிடைக்கிறது. விரைவில் இந்த தகவலையும் பொதுமக்கள் கான் இஸ்ரோ வழிவகை செய்யும் என்று நினைக்கிறன். அதேபோல சந்திரயான் 1, மங்கள்யான் தரவுகளை பார்ப்பவர்கள் மிக மிக குறைவு. ஆனால் இதன் பிறகு இந்த தரவுகளை பொதுமக்கள் எளிதில் அணுகி அதில் ஏதாவது கண்டுபிடிக்க முயற்சி செய்வார்கள். நாசா மாதிரியே இஸ்ரோவும் தரவுகளை பொதுமக்களுக்கு வழங்கும் நாட்கள் விரைவில் வரும் என்று நினைக்கிறேன்.

தனியார்கள் கண்டுபிடிக்கும் படைப்புகளுக்கு இஸ்ரோ அங்கீகாரம் வழங்குமா?

சென்னை பொறியாளரின் முயற்சியால் விண்வெளி ஆராய்ச்சி தரவுகளை பொதுமக்கள் எவ்வாறு அணுக முடியும் என்று தெரிந்து இருக்கும். இதன் மூலம் புதிய கண்டுபிடிப்புகள் வெளியே வரும். நாசா போல இஸ்ரோவும் தனியார் முயற்சிக்கு அங்கீகாரம் அளிக்கும் என்று நம்புகிறேன். ஆரம்ப காலத்தில் செயற்கைகோள்களை இஸ்ரோ மட்டும் செய்து வந்தது. அனால் தற்போது தனியார் மட்டுமல்லாது அரசு பள்ளி மாணவர்களும் செயற்கை கோள்களை செய்து வருகின்றனர். அதேபோல விண்வெளி ஆராய்ச்சி தரவுகளில் இருந்து புதிய கண்டுபிடிப்புகளுக்கு பலர் முன் வருவார் என்று நம்புகிறேன்.
Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.