சென்னை: சிந்தாதிரிப்பேட்டையில் உள்ள மே தினப் பூங்காவில் அமைந்துள்ள நினைவுச் சின்னத்துக்கு திமுக தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் மலரஞ்சலி செலுத்தி, மே நாள் வாழ்த்துரை ஆற்றினார்.

மேலும், சென்னை தியாகராயநகரில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழு அலுவலகத்தில், 136ஆவது மே தின விழாவில், மே தினக் கொடியை கட்சியின் மாநிலச்செயலாளர் பாலகிருஷ்ணன் ஏற்றி வைத்து உரையாற்றினார். இந்நிகழ்ச்சியில் மாநிலக்குழு உறுப்பினர் வெ.ராஜசேகரன் மற்றும் அலுவலகத் தோழர்கள், சமூக வலைதளத் தோழர்கள் கலந்துகொண்டனர்.

சென்னை போரூரில் உள்ள நாம் தமிழர் கட்சித் தலைமை அலுவலகத்தில், நாம் தமிழர் தொழிற்சங்கப் பேரவை சார்பாக தொழிற்சங்கப் பேரவை மாநிலத் தலைவர் அன்புத்தென்னரசன், மாநிலச் செயலாளர் ச.சுரேஷ்குமார் ஆகியோரது தலைமையில் மே தின நிகழ்ச்சியில் ஏராளமானவர்கள் கலந்துகொண்டனர்.

இதையும் படிங்க: 'சஞ்சீவி மலையை சுமந்த அனுமனைப்போல, மோடி இலங்கையின் பொருளாதார நெருக்கடியை சுமக்கத் தயார்' - அண்ணாமலை பேச்சு