ETV Bharat / state

பாஜக ஆட்சியில் தொழிலாளர்கள் நசுக்கப்பட்டு வருகின்றனர் - வைகோ குற்றச்சாட்டு

சென்னை: கடந்த ஐந்து ஆண்டு கால பாஜக ஆட்சியில், தொழிலாளர்கள் பல வகைகளில் நசுக்கப்பட்டு வருவதாக, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ குற்றம்சாட்டியுள்ளார்.

author img

By

Published : Apr 30, 2019, 6:17 PM IST

வைகோ

உலக தொழிலாளர் தினத்தை முன்னிட்டு மதிமுக பொதுச்செயளாலர் வைகோ வாழ்த்து செய்தி ஒன்றை வெளியிட்டார்.

அதில், "இந்தியாவில் கடந்த ஐந்து ஆண்டு கால பாஜக ஆட்சியில், தொழிலாளர்கள் பல வகைகளில் நசுக்கப்பட்டு வருகின்றனர். தொழிலாளர்கள் நலனுக்காக அம்பேத்கரின் முன் முயற்சியால் கொண்டுவரப்பட்ட 44 தொழிலாளர் பாதுகாப்புச் சட்டங்களை 4 சட்டங்களாக குறைத்து, நாடாளுமன்றத்தில் சட்ட முன்வரைவை பாஜக அரசு தாக்கல் செய்துள்ளது.

தொழிலாளர் உரிமைக்குப் போராடினால் மிரட்டி ஒடுக்கும் எதேச்சதிகாரப் போக்கு தலைவிரித்து ஆடுகின்றது. நிரந்தர தன்மை கொண்ட பணிகள் அனைத்தும் குறைந்த ஊதியத்தில் ஒப்பந்தத் தொழிலாளர்கள் மற்றும் தொழில் பழகுநர்களைக் கொண்டு நிறைவேற்றப்படும் கொடுமை நடக்கிறது.

குறைந்தபட்ச ஊதியம் கூட இல்லாமல், பணி பாதுகாப்பு இல்லாமல் கோடிக்கணக்கான ஒப்பந்தத் தொழிலாளர்களின் உழைப்பு சுரண்டப்படுகிறது. குறைந்தபட்ச ஊதியம், சமவேலைக்கு சம ஊதியம் போன்ற தொழிலாளர்களின் கோரிக்கைகளைச் செவிமடுக்க மோடி அரசு தயாராக இல்லை. தகவல் தொழில்நுட்பப் பணியாளர்கள் காலவரையின்றி பணிபுரியக் கட்டாயப்படுத்தப்பட்டு வருவது மட்டுமின்றி, அவர்களின் பணி பாதுகாப்பும் கேள்விக்குறியாக ஆகியுள்ளது.

தொழிலாளர் நலன் காக்கும் அரசு பொறுப்பு ஏற்றால்தான், அவர்களின் உரிமைகளைப் பேணிப் பாதுகாக்க முடியும். அதற்கான சூளுரையை மே நாளில் ஏற்போம்!தொழிலாளர்களுக்கு மே நாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், “உழைக்கும் வர்க்கத்தின் உரிமைத் திருநாளாம் மே முதல் நாளில் தொழிலாளர்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

18 ஆம் நூற்றாண்டின் இறுதியிலும், 19 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்திலும் தொழிற்புரட்சி உருவான காலகட்டத்தில், தொழிலாளர்கள் 12 மணி நேரம் முதல் 18 மணி நேரம் வரையில் பணி செய்யும்படிக் கட்டாயப்படுத்தப்பட்டனர். லாபத்தை மட்டுமே குறியாகக் கொண்டு இருந்த முதலாளித்துவம், தொழிலாளர்களின் உழைப்பை வரைமுறை இன்றிச் சுண்டியது.

குறைந்த வேலை நேரத்திற்காகத் தொழிலாளர்கள் வெகுண்டு எழுந்து போர்க்குரல் எழுப்பியபோது, இங்கிலாந்தில் சாசன இயக்கம் தோன்றி, 10 மணி நேர வேலை எனும் கோரிக்கையை முன்வைத்துப் போராடியது. இதனைத் தொடர்ந்து பிரான்சில் நெசவுத் தொழிலாளர்கள் போராட்டம், ஆஸ்திரேலியாவில் கட்டிடத் தொழிலாளர்கள் வேலை நிறுத்தம், ரஷ்யாவில் எட்டு மணி நேர வேலைக்காக எழுச்சி மிக்க போராட்டம் என உலகம் முழுவதும்
தொழிலாளர்கள் வீறுகொண்டு எழுந்தனர்.

அமெரிக்காவில் அனைத்துத் தொழிலாளர்களின் கூட்டமைப்பு 1886, மே 1 ஆம் நாள் நாடு தழுவிய வேலை நிறுத்தத்திற்கு அறைகூவல் விடுத்தது. 1886 ஆம் ஆண்டு மே 4 இல் அமெரிக்காவின் சிகாகோ நகரில், வைக்கோல் சந்தையில் பல்லாயிரக்கணக்கில் அணி திரண்ட தொழிலாளர்கள் மீது காவல்துறை துப்பாக்கிச் சூடு நடத்தியதில் நான்கு பேர் இறந்தனர். 

புரட்சிக்கு வித்திட்ட தொழிலாளர் தலைவர்களான ஆகஸ்ட் ஸ்பைஸ், ஆல்பர்ட் பார்சன்ஸ், அடலா~ப் பிஷர், ஜார்ஜ் ஏங்கல் ஆகிய நான்கு பேரை, 1887 நவம்பர் 11 இல் தூக்கில் இட்டனர். அவர்களது இறுதி ஊர்வலத்தில் வரலாறு கண்டிராத வகையில் 5 இலட்சம் தொழிலாளர்கள் திரண்டனர். நவம்பர் 11 உலக வரலாற்றில் கறுப்பு நாளாக இடம்பெற்று விட்டது.

இதன் பிறகுதான் மே முதல் நாள் முக்கியத்துவம் பெறத் தொடங்கியது. 1889 இல் பிரான்சு நாட்டின் தலைநகர் பாரிஸ் நகரில் பன்னாட்டுத் தொழிலாளர் மாநாடு கூடியது. அதில்தான் காரல் மார்க்ஸ் வலியுறுத்திய 8 மணி நேரம் வேலை நிர்ணயம் செய்ய போராட்டத்தை முன்னெடுக்கத் தீர்மானிக்கப்பட்டது.

1890 மே 1 ஆம் நாள் உலக அளவில் தொழிலாளர் இயக்கங்கள் வேலை நிறுத்தப்
போராட்டங்களுக்கு அறைகூவல் விடுத்தனர். தொழிலாளர் உரிமைப் போராட்டம் வெற்றி பெற்றது. உலகம் முழுவதும் மே தினம் வரலாற்று சிறப்புக்குரிய தொழிலாளர் நாள் ஆனது.

உலகத் தொழிலாளர்கள் இரத்தம் சிந்தி, உயிர்த் தியாகம் செய்து, போராடிப் பெற்ற உரிமைதான் எட்டு மணி நேரம் வேலை.

இந்தியாவில் கடந்த ஐந்து ஆண்டுக் கால பா.ஜ.க. ஆட்சியில், தொழிலாளர்கள் பல வகைகளில் நசுக்கப்பட்டு வருகின்றனர். தொழிலாளர் நலனுக்காக அண்ணல் அம்பேத்கர் முன் முயற்சியால் கொண்டுவரப்பட்ட 44 தொழிலாளர் பாதுகாப்புச் சட்டங்களை 4 சட்டங்களாக மாற்றி, நாடாளுமன்றத்தில் சட்ட முன்வரைவை பா.ஜ.க. அரசு தாக்கல் செய்துள்ளது.

தொழிலாளர் உரிமைக்குப் போராடினால் மிரட்டி ஒடுக்கும் எதேச்சதிகாரப் போக்கு தலைவிரித்து ஆடுகின்றது. தொழிற்சங்க உரிமைகள் பறிக்கப்பட்டுவிட்டன. நிரந்தர தன்மை கொண்ட பணிகள் அனைத்தும் குறைந்த ஊதியத்தில் ஒப்பந்தத் தொழிலாளர்கள் மற்றும் தொழில் பழகுநர்களைக் கொண்டு நிறைவேற்றப்படும் கொடுமை தொடருகின்றது. குறைந்தபட்ச ஊதியம் கூட இல்லாமல், பணிப் பாதுகாப்பு இல்லாமல் கோடிக்கணக்கான ஒப்பந்தத் தொழிலாளர்களின் உழைப்பு சுரண்டப்படுகின்றது.

குறிப்பிட்ட கால வேலை என்று நிர்ணயித்து, நிரந்தர வேலைவாய்ப்பு பறிக்கப்பட்டு வருகின்றது. குறைந்தபட்ச ஊதியம், சமவேலைக்கு சம ஊதியம் போன்ற தொழிலாளர்களின் கோரிக்கைகளைச் செவிமடுக்க மோடி அரசு தயாராக இல்லை. தகவல் தொழில்நுட்பப் பணியாளர்கள் காலவரையின்றி பணிபுரியக் கட்டாயப்படுத்தப்பட்டு வருவது மட்டும் அன்றி, அவர்களின் பணி பாதுகாப்பும் கேள்விக்குறியாக ஆகி வருகின்றது.

தொழிலாளர் நலன் காக்கும் அரசு பொறுப்பு ஏற்றால்தான், பெற்ற உரிமைகளைப் பேணிப் பாதுகாக்க முடியும். அதற்கான சூளுரையை மே நாளில் ஏற்போம்!

தொழிலாளர்களுக்கு மே நாள் வாழ்த்துக்களை மீண்டும் தெரிவித்துக் கொள்கின்றேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.