ETV Bharat / state

ஆளுநர் ஹிட்லரின் வாரிசாக செயல்படுகிறார் - கே.பாலகிருஷ்ணன் - கே பாலகிருஷ்ணன்

சென்னையில் ஆளுநர் மாளிகை அருகே ஆர்.என்.ரவியைக் கண்டித்து மார்க்சிஸ்ட் கட்சி நடத்திய ஆர்ப்பாட்டத்தில், மார்க்சியம் குறித்து தனது கருத்தை திரும்ப பெறாவிடில், ஆளுநர் மாளிகை சிறைக்கூடமாக மாறும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் எச்சரித்துள்ளார்.

ஆளுநருக்கு எதிராக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் போராட்டம் நடத்தினர்

author img

By

Published : Feb 25, 2023, 5:51 PM IST

சென்னை: மார்க்சியம் குறித்தும், அறிவுக்கு புறம்பாகவும் பேசி வரும் ஆளுநர் ஆர்.என்.ரவி, வருத்தம் தெரிவிக்க கோரி இன்று (பிப்.25) ராஜ்பவன் அருகே சின்னமலையில் கருப்பு கொடி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மார்க்சிஸ்ட் கட்சியின் சென்னை மாவட்டக் குழுக்கள் நடத்திய இந்த போராட்டத்திற்கு தலைமை தாங்கி பேசிய கே.பாலகிருஷ்ணன், "மார்க்சிசத்தை விமர்சிப்பதில் தவறில்லை. ஆளுநர் என்ற பொறுப்பில் இருந்து கொண்டு ஆர்எஸ்எஸ் பிரச்சாரம் செய்வதைதான் கண்டிக்கிறோம்.

சோசலிசம், பொதுவுடமை என்ற வார்த்தைகளுக்கான தத்துவம் தான் மார்க்சியம். சோசலிசத்திற்கு இலக்கணம் படைத்தவர் காரல் மார்க்ஸ். அரசியல் சாசனத்தின் முகவுரையில் மதச்சர்பாற்ற சோசலிச ஜனநாயக குடியரசு இந்தியா என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த அரசியலமைப்பு சட்டத்திற்கு விரோதமாக ஆளுநர் பேசுகிறார்.

இந்தியாவை சிதைத்தது மார்க்சியமா? வர்ணாசிரமமா? என்பதை ஆளுநருடன் எங்கு வேண்டுமானாலும் விவாதிக்க தயாராக இருக்கிறோம். ஆளுநர் மாளிகைக்கு முன்பே கூட, கட்சியின் கடைகோடி தோழனோடு விவாதித்து ஆளுநரால் வெற்றி பெற முடியுமா? ஏனெனில் உங்களிடம் பொய் மூட்டைகள் மட்டுமே இருக்கிறது. பொதி சுமைப்பதை போல் யாரோ சொன்ன தத்துவத்தை சுமக்கிறீர்கள். யாரும் கேள்வி கேட்க முடியாத, எதிர்த்து கருத்து சொல்ல முடியாத இடத்திற்கு சென்று எதையாவது உளறிவிட்டு வருகிறார்.

நான் சொல்வதெல்லாம் மார்க்சியம் அல்ல. என்னை விமர்சிக்க எவருக்கும் உரிமை உண்டு. என்னை மேலும் மேம்படுத்த பலபேர் தேவைப்படலாம் என்றார் மார்க்ஸ். வாழ்நாள் முழுவதும் வறுமையில் உழன்று, ஒடுக்கப்பட்ட மக்களுக்காக உழைத்தவர். தனது குழந்தை இறந்தபோது, சவப்பெட்டி வாங்க கூட அவரிடம் பணம் இல்லை. நாடற்ற குடிமகனாக வாழ்ந்தவர். சோசலிசம், பொதுவுடமை என்பது உழைப்பாளி மக்களின் பொன்னுலகம்.

ஆளுநருக்கு எதிராக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் போராட்டம் நடத்தினர்
ஆளுநருக்கு எதிராக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் போராட்டம் நடத்தினர்

படைப்பு, கடவுள், மார்க்சியம் எழுதி 150 ஆண்டுகளுக்கு மேலாகி விட்டது. இன்றைய நவீன யுகத்திலும், அவரின் கருத்துக்கள் புதுமையாக இருக்கிறது. மூலதனம், உற்பத்தி கருவிகள் மட்டுமே பொருளை உற்பத்தி செய்யாது. தொழிலாளி என்கிற உழைப்பு சேரும்போது தான் உற்பத்தி நடக்கிறது.

உலகத்தை உற்பத்தி செய்கிற படைப்பாளி தொழிலாளி தான் என்றார் மார்க்ஸ். இந்து மதம் படைப்பு, கடவுள், பிரம்மா என்றது. மார்க்ஸ் சொன்னார், தொழிலாளி தான் படைப்பு, கடவுள் என்றார். தொழிலாளி இல்லாவிட்டால், 5 ஆயிரம் ஆண்டு வரலாறு கொண்ட இந்த மண் பாறைகளாக மட்டுமே இருந்திருக்கும். இந்த நவ உலகத்தை படைத்திருப்பவன் தொழிலாளி என்று சொன்னவர் மார்க்ஸ். இதிலிருந்து முதலாளி எப்படி சுரண்டுகிறான் என்ற விளக்கத்தை கொடுத்தார். இதையெல்லாம் ஆர்.என்.ரவிக்கு சொல்லி கொடுக்காமல், டுடோரியல் கல்லூரியில் பயிற்சி கொடுத்து அனுப்பியிருக்கிறார்கள்.

சமூகம் காரல் மார்க்சை மறுவாசிப்புக்கு உட்படுத்தும் வேலையை ஆளுநர் செய்திருக்கிறார். மக்கள் கிராமங்கள் தோறும் மார்க்சியத்தை படிக்கும் வாய்ப்பை உருவாக்கி உள்ளார். மார்க்சியம் அழிக்க முடியாதது. இந்தியாவை பார்க்காமலே, 200 ஆண்டுகளுக்கு முன்பே இந்தியாவின் சமூக அமைப்பு எப்படி உள்ளது என்பதை படக்காட்சியை போல எழுதி இருக்கிறார். மார்க்சியம் இந்தியாவை சிதைக்கவில்லை. வருணாசிரமம் தான் சிதைத்தது. காங்கிரஸ் கட்சியும், காந்தியும் பிறப்பதற்கு முன்பே, விடுதலைப் போராட்டம் அரும்புவதற்கு முன்பே, பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தை எதிர்த்து மொழி, சாதியால் பிளந்து கிடக்கிற உழைப்பாளி வர்க்கம் திரண்டு போராடி வெற்றி பெறும் என்று கணித்தவர் மார்க்ஸ்.

விடுதலை போராட்டத்திற்கும் உரம் ஊட்டியவர் மார்க்ஸ். சாதி, மதம் என்ற வர்ணாசிரமம் என்ற தத்துவத்தின் பெயரில் இந்தியாவை சிதைத்தவர்கள் கொடுமைக்கார சனாதனிகள், ஆர்எஸ்எஸ்-காரர்கள். மார்க்ஸ் யார், மார்க்சியம் என்றால் என்ன என்பதை விளக்கி குழந்தைகளுக்கான எழுத்தாளர் ஆதிவள்ளியப்பன் எழுதி, பாரதி புத்தகாலயம் பதிப்பித்துள்ள ‘இளையோருக்கு மார்க்ஸ் கதை’ என்ற புத்தகத்தை ஆளுநருக்கு அனுப்பி வைக்கிறோம். அதை படித்து ஆளுநர் மார்க்ஸ், மார்க்சியத்தை பற்றி படித்து புரிந்து கொள்ளட்டும்.

ஆளுநர் ஆளுநராக செயல்படாமல், அரைவேக்காட்டுதனமான அரசியல்வாதியாக செயல்படக் கூடாது. கடந்த நூற்றாண்டின் தலைசிறந்த அறிஞர் காரல் மார்க்ஸ் என்ற பிபிசி அறிவித்துள்ளது. அவரை விமர்சிக்கிற தகுதி ஆளுநருக்கு அறவே இல்லை. தமிழ்நாட்டை கேவலப்படுத்தி, சட்டமன்றத்தை அவமானப்படுத்தினீர்கள். உங்கள் பாணியில் நாங்களும் இறங்கினால் ஆளுநர் மாளிகை சிறைக்கூடமாக மாறும்; நீங்கள் வெளியே வர முடியாது; வீதியில் செல்ல முடியாது. எனவே, ஆளுநர் தனது அவதூறு கருத்தை திரும்பபெறாத வரை, மாநிலத்தின் எந்த மூலைக்கு சென்றாலும், அவருக்கு செங்கொடி இயக்கத்தை சார்ந்தவர்கள் கருப்பு கொடி காட்டுவார்கள்.

உலகத்தில் எத்தனையோ தத்துவங்கள், மதக் கருத்துக்கள், பொருளாதார சிந்தனைகள் உருவாகி இருக்கிறது. ஆனால், மனிதனை வாழவைக்கிற மகத்தான மார்க்சிய தத்துவத்திற்கு நிகராக இதுவரை உருவாகவில்லை. மார்க்சின் மூளை, அது ஒரு புரட்சியின் மூளை என்று அறிஞர் சாமிநாத சர்மா குறிப்பிட்டுள்ளார். உலகத்தில் யார் போராடினாலும், அவர்களுக்கான ஆயுதமாக, உந்து சக்தியாக மார்க்சியம் உள்ளது. ஒரு தத்துவம் வாழ்வது வளர்வது குறிப்பிட்ட காலத்திற்குள் நிகழாது. 2ஆயிரம் ஆண்டு வரலாறு கொண்ட முதலாளித்துவ சமூகம். மார்க்சிய தத்துவம் 200 ஆண்டு வரலாறு கொண்டது.

முதலாளித்துவ சிந்தனை, கருத்தியல், இலக்கியம், அரசியல் என அனைத்தையும் தவிடு பொடியாக்கி முன்னேற வேண்டியுள்ளது. எனவே, அதன் வளர்ச்சி எதிர்பார்த்த வேகத்தில் இருக்காது. லெனின் கூறியபடி ஓரடி முன்னேறினால் ஈரடி சறுக்கும். மார்க்சியம் என்பது எதிர்நீச்சல் அடிப்பது. நெருப்பாற்றை நீந்தி செல்வது. எதிரி முகாம்களை வீழ்த்தி அங்குலம் அங்குலமாக முன்னேற வேண்டிய தத்துவம். எனவே, இறுதியில் முதலாளித்துவம் வீழும், பாட்டளி வர்க்கம் வெல்லும்" என கூறினார்.

இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன்,
"மனித குல விடுதலைக்கு வித்திட்ட காரல் மார்க்சையும், பரிணாம வளர்ச்சி கோட்பாட்டை உருவாக்கிய சார்லஸ் டார்வினையும் ஆளுநர் அறைகுறையாக புரிந்து கொண்டு அவதூறாக, அறிவிலித்தனமாக பேசியிருக்கிறார். 'எல்லோரும் எல்லாமும் பெற வேண்டும் / இங்கு இல்லாமலை இல்லாத நிலை வேண்டும் / வல்லான் பொருள் குவிக்கும் தனியுடமை - நீங்கி / இந்நாட்டில் வர வேண்டும் பொதுவுடமை' என கவிஞர் கண்ணதாசன் மார்ச்சியத்தை விளக்கி இருக்கிறார்.

ஆர்எஸ்எஸ் பிரச்சாரக்காரராக ஆளுநர் பேசி வருகிறார். ஆர்எஸ்எஸ் தலைவர் மூஞ்சே, 1931ம் ஆண்டு இத்தாலி சென்று 15 நாட்கள் தங்கி, சர்வதிகாரி முசோலினி, அவரது படைத்தளபதிகளை சந்திக்கிறார். அதன்பின் இந்தியா வந்த அவர், இத்தாலியில் ராணுவத்திற்கும், முசோலினி படைக்கும் கொடுப்பது போன்ற பயிற்சியை, ஆர்எஸ்எஸ்-காரர்களுக்கும் கொடுக்க வேண்டும் என்றார். அந்த மேற்கத்திய பாசிச தத்துவத்தை இந்தியாவில் அறிமுகப்படுத்தியது ஆர்எஸ்எஸ். ஆனால், மக்களை வாழ வைக்கும் மார்க்சிய தத்துவத்தை, ஹிட்லரின் வாரிசாக உள்ள ஆளுநர் விமர்சிக்கிறார். ஆளுநர் தனது அவதூறு கருத்திற்கு வருத்தம் தெரிவிக்கும் வரையில் மார்க்சிஸ்ட் கட்சியின் போராட்டம் தொடரும்" என கூறினார்.

இதையும் படிங்க: ஈரோட்டில் ஜனநாயக முறையில் தேர்தல் நடந்தால் அதிமுக வெற்றி உறுதி - ஐஜேகே ஜெயசீலன்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.