ETV Bharat / state

மாஞ்சா கயிற்றால் விபரீதம்: கழுத்தில் நூல் அறுத்து காயம் - மாஞ்சா கயிற்றால் விபரீதம்

இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞர் கழுத்தில், எங்கிருந்தோ வந்த மாஞ்சா கயிறு அறுத்து காயம் ஏற்பட்டது.

manja thread  accident  chennai manja thread incident  chennai news  chennai latest news  crime news  குற்றச் செய்திகள்  சென்னை செய்திகள்  மாஞ்சா கயிறு  சென்னை மாஞ்சா கயிறு விவகாரம்  மாஞ்சா கயிற்றால் விபரீதம்  கழுத்தில் நூல் அறுத்து காயம்
மாஞ்சா கயிற்றால் விபரீதம்: கழுத்தில் நூல் அறுத்து காயம்
author img

By

Published : Jun 16, 2021, 6:58 AM IST

சென்னை: ஆண்டுதோறும் மாஞ்சா கயிற்றினால் பல உயிரிழப்புகள் ஏற்படும் நிலையில், மாஞ்சா கயிற்றுக்குத் தடைவிதிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் கரோனா காலத்தில் மீண்டும் மாஞ்சா கயிற்றின் பயன்பாடு தலைதூக்கி உள்ளது.

அந்தவகையில் நேற்று (ஜூன் 15) இரவு ஒட்டியம்பாக்கத்தைச் சேர்ந்த வெங்கடேஷ், குரோம்பேட்டை மேம்பாலத்தில் தனது இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தார். அப்போது, திடீரென எங்கிருந்தோ வந்த மாஞ்சா கயிற்றால் வெங்கடேசனின் கழுத்தில் காயம் ஏற்பட்டது.

இருசக்கர வாகனத்தின் வேகம் குறைவாக இருந்ததால், மாஞ்சா கயிறு கழுத்தை இறுக்கவும், தனது கையால் கயிற்றைப் பிடித்து, சிறு காயத்துடன் இளைஞர் உயிர் தப்பினார். பின்னர் அருகிலிருந்தவர்கள் அவரை தனியார் மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர்.

சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய வெங்கடேஷ், இது குறித்துக் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

இதையும் படிங்க: சிறையில் இருக்கும் ஹரி நாடார் மீது மேலும் இரு தொழிலதிபர்கள் புகார்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.