சென்னை வில்லிவாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் திவ்யா (32) (பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது). இவர் கணவர், மகன் (8), மகள்(3) ஆகியோருடன் வசித்து வருகிறார்.
இந்நிலையில் திவ்யா கணவருடன் சேர்ந்து தனியார் காப்பீட்டு நிறுவனம் ஒன்றும் நடத்தி வந்துள்ளார். அதில் ரத்தினக்குமார் என்பவர் பணிபுரிந்து வருகிறார். திவ்யா தனது குடும்பத்தில் ஏற்பட்ட சிறு சிறு பிரச்சனைகளை, ரத்தினகுமாரிடம் நண்பராக நினைத்து பகிர்ந்து வந்துள்ளார்.
நாளடைவில் அவர் திருமணத்திற்கு முன்பு வினய் கல்யாண் என்பவருடன் ஏற்பட்ட பழக்கம் பற்றி தெரிவித்துள்ளார். இதை வைத்து ரத்தினகுமார் திவ்யாவை மிரட்டத் தொடங்கியுள்ளார்.
மேலும் தான் செல்லுவதை கேட்டால் இந்த ரகசியம் வெளியில் செல்லாது என மிரட்டி, வாட்ஸ் அப் மூலம் பெண்ணின் நிர்வாண படங்களையும், வீடியோ கால் செய்ய வைத்து அதையும் பதிவு செய்து வைத்துக்கொண்டுள்ளார்.
இதைத் தொடர்ந்து ஆபாச படங்களை இணையத்தில் பதிவேற்றி விடுவதாக மிரட்டி திவ்யாவை தனது பாலியல் இச்சைக்கு பணிய வைத்துள்ளார். ஒவ்வொரு முறையும் அதையும் வீடியோ பதிவு செய்து வைத்துக் கொண்டுள்ளார்.
இதற்கிடையில் திவ்யாவின் முன்னாள் காதலனான வினய் கல்யாண் உடன் சேர்ந்து கொண்டு தொடர்ந்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதனால் பாதிக்கப்பட்ட திவ்யா கணவரிடம் நடந்ததை எடுத்துக் கூறி அவருடன் சேர்ந்து வில்லிவாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
அந்த புகாரில் திவ்யா, "ரத்தினக்குமாரின் இ - மெயிலில் என்னுடைய ஆயிரத்திற்கும் மேற்பட்ட அந்தரங்க படங்கள், வீடியோக்கள் உள்ளன. அதை ரத்தினகுமார் பல நபர்களுக்கு அனுப்பியுள்ளார்" என குறிப்பிட்டுள்ளார்.
மேலும் இது போன்று அதே காப்பீட்டு நிறுவனத்தில் பணி புரிந்த வந்த மேலும் மூன்று பெண் ஊழியர்களுக்கும் ரத்தினக்குமார் பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் அளித்துள்ளனர்.
இதையடுத்து இந்த புகாரை வைத்து பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவு காவல் துறையினர் விசாரணை செய்து ரத்தினகுமாரை தேடி வருகின்றனர்.
இதையும் படிங்க: விடுதியில் ரகசிய அறை அமைத்து பாலியல் தொழில் - இருவர் கைது!