ETV Bharat / state

தற்கொலைக்கு முயன்றவரை சமரசம் செய்த திமுக எம்எல்ஏ!

சென்னை: மன உளைச்சலில் செல்ஃபோன் டவர் மீது ஏறி தற்கொலைக்கு முயன்ற இளைஞரை திமுக எம்எல்ஏ சேகர்பாபு நேரில் சென்று சமாதானம் செய்தார்.

தற்கொலைக்கு முயன்றவரிடம் சமரசம் பேசும் எம்எல்ஏ
author img

By

Published : Jun 28, 2019, 10:08 AM IST

Updated : Jun 28, 2019, 11:15 AM IST

சென்னை அன்னை சத்யா நகர் பகுதியைச் சேர்ந்தவர் மாறன் வயது (32). கட்டடத் தொழிலாளியான இவருக்கு திருமணமாகி மனைவி, இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் இவர் அடிக்கடி மது அருந்திவிட்டு போதையில் மனைவியுடன் சண்டையிட்டு வந்துள்ளார். இதனால் அவரது மனைவி இவரை விட்டு தனியாக பிரிந்து வாழ்ந்து வந்துள்ளார்.

தற்கொலைக்கு முயன்றவரிடம் சமரசம் பேசும் எம்எல்ஏ

இதனால் மன உளைச்சலுக்கு ஆளான அவர், நேற்று இரவு அதேபகுதியில் உள்ள செல்ஃபோன் டவர் மீது ஏறி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார். இதையடுத்து தகவலறிந்து வந்த காவல்துறையினர், தீயணைப்பு வீரர்கள் ஆகியோருடன் இணைந்து அவரை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். ஆனால் அவர் கிழே இறங்கவில்லை. அப்போது அந்த வழியே வந்த துறைமுகம் தொகுதி திமுக எம்எல்ஏ சேகர்பாபு, மாறன், அவரது குடும்பத்தினரிடம் சமரசம் பேசியதைத் தொடர்ந்து அவர் தற்கொலை முயற்சியை கைவிட்டார்.

Intro:Body:செல்போன் டவர் மீது ஏறி தற்கொலைக்கு முயன்ற வாலிபர்.

எம்.எல்.ஏ நேரில் சென்று சமரசம்.

சென்னை அன்னை சத்யா நகர் பகுதியை சேர்ந்தவர் மாறன் வயது 32.இவர் கட்டுமான தொழில் செய்து வருகிறார். இவருக்கு கடந்த 2012ஆம் ஆண்டு திருமணமாகி 2 பெண் குழந்தைகள் உள்ளனர் .இந்நிலையில் இவர் அடிக்கடி குடித்துவிட்டு குடிபோதையில் மனைவியுடன் சண்டையிட்டு வந்துள்ளார். இதனால் அவரது மனைவி இவரை விட்டு தனியாக பிரிந்து வாழ்ந்து வந்துள்ளார். மேலும் இவர் மீது பல அடிதடி வழக்குகள் உள்ளதால் இவரது வீட்டிற்கு அடிக்கடி போலீஸ் வந்து செல்வது வழக்கமாக இருந்து வந்துள்ளனர். இதனால் இவரது தந்தை ராமச்சந்திரன் என்பவர் இவரை வீட்டை விட்டு துரத்தியுள்ளார்.இதனால் பல நாட்கள் மன உளைச்சலில் இருந்து வந்துள்ளார்.மேலும் இவரது தந்தையிடம் வீட்டை எழுதி தருமாறும் பல முறை வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது..இந்நிலையில் மாறன் திடீரென்று காமராஜர் சாலையில் உள்ள செல்போன் டவர் மீது ஏறி நின்று தற்கொலைக்கு முயற்சி செய்தார். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது..பின்னர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர் மற்றும் ஒரு தீயணைப்பு வாகனங்கள் மீட்பு பணிக்காக வந்தனர்.இந்நிலையில் அவ்வழியே வந்த துறைமுக தொகுதி எம்எல்ஏ சேகர்பாபு மாறனிடம் சமரசம் பேசியதால் செல்போன் டவரிலிருந்து கீழே இறங்கினார்.பின் அவரது மனைவியுடன் சேர்த்து வைப்பதாகவும்,அவரது குடும்பத்தினருடன் பேசி சமரசம் செய்து அனுப்பி வைத்தார். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரப்பரப்பு ஏற்பட்டது...Conclusion:
Last Updated : Jun 28, 2019, 11:15 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.