சென்னை வில்லிவாக்கத்தைச் சேர்ந்தவர் பாலகணபதி. இவர், அமைந்தகரையில் ஆட்களை வேலைக்கு அனுப்பும் முகவராக பணிபுரிந்து வருகிறார். அவரிடம் வேலை பார்க்கும் வேலை ஆட்களுக்கு சம்பளம் கொடுப்பதற்காக, வீட்டில் இருந்த நகைகளை அடகு வைத்து 40 ஆயிரம் ரூபாய் புரட்டியுள்ளார். இந்நிலையில், நேற்று மாலை கலைவாணர் அரங்கில் ரஜினிகாந்த் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள உள்ளதை அறிந்த பாலகணபதி, பாக்கெட்டில் 40 ஆயிரம் ரூபாய் பணத்துடன் அங்கு சென்றுள்ளார்.
முக்கியஸ்தர்கள் வரும் நுழைவாயிலில் நின்று தனது செல்ஃபோனில் ரஜினிகாந்த் வருவதை வீடியோ எடுத்துள்ளார். அப்போது அவர் பாக்கெட்டில் இருந்த பணத்தை யாரோ திருடிச் சென்றுள்ளனர். பின்னர், பணம் திருடப்பட்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்த பாலகணபதி, இது குறித்து திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து பிக்பாக்கெட் திருடர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.